பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தும்பி சொகினனுர் 117

பரத்தையர் ஒழுக்கம்பூண்டு தவறிய தலைமகனுக்காகத் தலைவி.பால் தூது வந்தவர்களே நோக்கி, பெரியவர்கள் நெடிய பெரிய தேர்செய்து அதில் ஏறி அமர்ந்து ஊர்ந்து மகிழ்வார்கள் என்றால், இளஞ்சிறுவர்கள், சிறிய தேர் செய்து அதை ஈர்த்தே இன்புறுவர்; அதைப்போன்றே, தலைவனேப் பெற்றுப் பேரின்பம் அடையும் பேற்றினே எவ ாயினும் பெறட்டும்; நாங்கள் அவன் அன்று அளித்த நட்புரிமை ஒன்றை உள்ளத்தில்கொண்டே மகிழ்ந்து வாழ் வோம்; ஆகவே அவர்பொருட்டுத் தூதுவர வேண்டிய தில்லை” எனத் தோழிகூறும் பகுதியும் நயம்செறிந்து தோன்றுதல் காண்க.

தச்சன் செய்த சிறுமா வையம் - ஊர்ந்து இன்புரு அர் ஆயினும் கையின் ஈர்த்து இன்புறு உம் இளையோர் போல, உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப் பொய்கை யூரன் கேண்மை செய்தின் புற்றனெம் : செறிந்தன வளையே.”

(குறுங் : சுக.)