பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. தொடித்தலே விழுத்தண்டினும் " சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அறிது '

என்றார் பெரியாரொருவர் ; உள்ளம் ஒருவழி கில்லாது ஏதேனும் ஒன்றை எண்ணிக்கொண்டேயிருக்கும் இயல் புடையது; ஒலி, ஒளிகளினும் விரைந்து செல்லக்கூடிய வன்மை உடையது; உலகனேத்தையும் ஒரு நொடியில் சுற்றிவந்துவிடும்; உள்ளத்தை ஒரு நொடிப்பொழுதும் ஒயவைத்து உறங்கவைத்தல் இயலாது ; ஒன்றைவிட்டு ஒன்றைத் தொடர்ந்து எண்ணிக்கொண்டே யிருக்கும்; தொடர்பில்லாத பல பொருள்களைத் தொடர்ந்து எண்ணிக் கொண்டேயிருக்கும்; உள் ள த் தி ன் இவ் வியல்பை யுணர்ந்தே அதை மனக்குரங்கு என அழைப்பர். உள்ளம் கிகழ்கால நிகழ்ச்சிகளை மட்டுமே வரிசையாக எண்ணிப் பார்க்கும் என்று கொள்ளுதல் கூடாது; எதிர்கால நிகழ்ச் சிகள் எவ்வெவ்வாறு இருத்தல்வேண்டும் என்று எண்ணி ஏங்குவதும் உண்டு; எதிர்காலத்தை எண்ணி எங்கும் உள்ளம் இறந்தகால கிகழ்ச்சிகளையும் கினைவூட்டிக் காண் பதும் உண்டு.

வாழ்நாள் முழுதும் ஒரேநிலையில், அதாவது என்றும் வறியராகவோ, அல்லது என்றும் செல்வராகவோ வாழ்ந் தவர் உலகத்து அரியர்; தொடக்கத்தில் பெருவாழ்வு வாழ்ந்து இறுதியில் வறியரானவரும், தொடக்கத்தில் நிறைந்த வறுமை வாழ்வினாாய்ப் பின்னர்ப் பெருவாழ்வு பெற்றவருமே உலகத்தில் இடம் பெற்றிருக்கக் காண்கி ருேம். வறுமையில் தொடங்கி வளத்தில் வாழ்வு நடாத் துவோர் சிறிது அறிவுடையாயின் கம்பழங்காலவாழ்வை மறவாது, அது கற்றுத்தந்த பாடத்தை மனதில் இருக்கிப் பண்புடைவாழ்வை மேற்கொள்வர் ; அவர்பால் அவ் வறிவு இல்லாதுபோயின், அன்னர் தம் பண்டைய கிலேயினை மறந்து செல்வச்செருக்கால் செய்வதறியாது கேடு பல செய்து வீழ்வர்; பெருவாழ்வில் வாழ்ந்து கெட்டவர் நல்லவராயின், அவர் தம் பண்டைய கிகழ்ச்சிகளே எல்லாம்