பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 உவமையாற் பெயர்பெற்ருேம்

தக்க அறிவுவளத்தை அவன் பெற்றுவிட்டான் ; இயற்கை வழிப் பெறும் மழையற்ற இடங்களிலும், கிலத்திற்கு வேண்டும் நீரை, அவன் பல்வேறு வழிகளில் பெற்று விடுகிருன் ; பேராறுகளின் குறுக்கே அணைகட்டித் தேக் கிய ஆற்றுநீர், கால்வாய்வழி வந்து அவனுக்கு ஆயுட் காலம் முழுதும் துணைபுரிகிறது ; ஆண்டுமுற்றும் நீர் ஒடும் பேராறுகள் இல்லா இடங்களில், சிற்ருதுகளில் மழைபெய்து வெள்ளம் வருங்கால், அவ் வெள்ளநீரை வாய்க்கால் வழியே கொணர்ந்து தேக்கிவைக்கும் பெரிய பெரிய ஏரிகள், பல ஆண்டுகளுக்குப் பயனளிக்கும் ; இத் தகைய பெரிய நீர்நிலைகளே அல்லாமல், ஒராண்டிற்கு, ஆறு திங்களுக்கு, மூன்று திங்களுக்காம் நீரைத் தரும் நீர்கில்ேகள் பல ஆங்காங்கே அமைந்து அவனுக்கு நீர் அணித்துத் துனே புரிகின்றன; ஆற்றுக் கால்வாய்களோ, ர்ேகில்ேகளோ இல்லாத இடங்களில் தோண்டிய கிணறுகள் அவனுக்கு கின்று உதவுகின்றன ; கிணறுகளில் மேல்நீர் வற்றிவிடினும், நீர்த்தாரை உள்ளவரையும் தளேத்துச் சென்று அந்நீரை மேலே கொணரும் வழி வகைகளையும் இன்று உழவர் பெற்றுள்ளனர்.

கிணறும் இருக்கிறது ; கிணற்றில் நீரும் கிறைக் துளது. என்ருலும், இவ்வளவு ஏர் அமர்த்திவிட்டோமே, இவையெல்லாம் தொழிலாற்றுவதற்கான நீரை எப்போது இறைப்பது என்ற கவலையும் இவனுக்கில்லை : ஏற்றமும், கபிலேயும்கொண்டே இறைக்கவேண்டும் என்றகில் எப் போதே மறைந்துவிட்டது; முடுக்கிவிட்டால், மூச்சு விடும்முன்னே மிகப் பாங்த கிலத்திற்கும் தேவையான நீரை வாரி வழங்கத்தக்க விஞ்ஞானப் பொறிகளே அவன் இன்று பெற்றுளான்; அதன் உதவியால், சிறிதுநேரக் தில் பெரிய கிணறுகளையும் வற்றச்செய்து வேண்டும் நீர் பெறும் வாய்ப்பு அவனுக்கு இருக்கிறது. ஆகவே, நீர் இல்லையே என்ருே, நீர் உள்ளபோதே உழவுத்தொழில் முடித்துவிடவேண்டுமே என்ருே அவன் கவலைகொள்ளத் தேவையில்லை; அவன் எப்போது கலப்பையைக் கையில்