பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரேருழவர் 15

கணமே அவனுக்கு வேண்டும் நீர் அளிக்கவல்ல வழி வகைகள் பலப்பல இன்றுள்ளன.

ஆகவே, இத்தகைய சூழ்நிலையில் நடைபெறும் இன்றைய உழவுத் தொழிலையும், உழுபவனேயும் மட்டுமே அறிந்தவர்களால், ஒரேர் உழவர் உள்ளத்தை உணர்தல் இயலாது ; அவர் வாழ்ந்த காலத்தில், உழவுத்தொழில் நடைபெறுதற்காம் சூழ்நிலையினையும், அச் சூழ்நிலையில் நின்று தொழில்புரிந்த அக்கால உழவனேயும் உணர்ந்தவர் களாலேயே அவர் பாட்டின் பொருள் உணர்ந்து பாராட்ட முடியும்; ஆதலின் அக்கால உழவனேச் சிறிது அறிந்து

கொள்வோமாக.

கிலத்திற்குரியவன் வேறு அங்கிலத்தை உழுபவன் வேறு என்ற கிலே பண்டு இல்லை ; கிலத்திற்குரியவனே கிலத்தை உழுதல் வேண்டும்; ஒவ்வொருவரும் ஏதோ ஒர் அளவுள்ள கிலத்தைத் தங்களுக்கெனப் பெற்றிருந்தனர் ஆதலின், பிறர்கிலத்தில் கூ லி க் கு உழவுத்தொழில் புரிவோர் அரியாயினர்; ஆகவே, தன் கிலத்தில் பிறர் உழுது பயன் அளிப்பர் என கிலமுடையோன் எதிர் பார்த்தல் இயலாது; இதனல், கிலம் படைத்தோன் உழவுத் தொழிலின் துட்பங்களை உணர்ந்தவனுய் விளங்கின்ை ; ஏரின் அருமை, நீரின் இன்றியமையாமை, பருவத்தே பயிர்செய்யவேண்டிய பண்பு ஆகிய இவற்றை அவன் நன்குணர்ந்திருந்தான்்; தன்தொழிலைத் தான்ே முடித்தல் வேண்டும்; தன்கையே தனக்குஉதவி என்ற அறிவு அவன்பால் அமைந்திருந்தது.

வாழ்வதற்கான வழிகள் இ ன் று வகைவகையாக வளர்ந்து தோன்றுவதேபோல், பண்டு விரிந்து விளங்க வில்லை. பண்டைக்கால மக்கள் அனைவரும் உழவுத்தொழில் ஒன்றையே நம்பி உயிர்வாழ்ந்திருந்தனர்; அதுவன்றி வேறுதொழில்களை அவர்கள் அறிந்திருந்தார்கள் என்று கூறுதல் அருமையே; ஆதலின், வாழவேண்டும் என்று