பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 உவமையாற் பெயர்பெற்ருேர்

விரும்பிய அக்கால உழவன், தன் கிலத்தையே நம்பி வாழ வேண்டியவனுயினன். உழவேண்டிய காலத்தில் உறங்கிவிட்டால், ஒராண்டிற்கு உணவின்றி வாடனேரிடும் என்பதையும் அவன் அறிக்கிருந்தான்்; அதனுல், சிலத் தைத் தக்க காலத்தே உழுது பயிரிடவேண்டும் என்ற எண்ணம் அவன். உள்ளத்தில் ஆழக் குடிகொண்டிருந்தது.

கிலத்தை உழுதே ஆகவேண்டும் என்ற கட்டாய நிலையால் உழவேண்டும் என்ற ஊக்கத்தோடு உழைக்க முன்வரும் அக்கால உழவன், அத்தொழிலை எளிதாக மேற்கொள்ளக்கூடிய சூழ்கிலேயில் வாழ்ந்தான்ல்லன் ; தான்் வேண்டும்போது பயிர் செய்யலாம்; வேண்டும் போது வேண்டிய ஏர் கிடைக்கும்; நீர் கினைத்தபோது வந்து கிறையும் என்ற கிலே அவனுக்கு இல்லை; எண்ணிய எண்ணியாங்கு முடிக்கும் திண்மையை, அவன் உழவுத் தொழிலில் பெற்றிருக்கவில்லை. மிக மிகத் துயர்தரும் சூழ்நிலையிலேயே, அவன் தன் உழவுத்தொழிலை மேற். கொண்டு வந்திருக்கக் காண்கிருேம்.

- உழவே உயிரூட்டும் தொழில்; அத்தொழிலை எவ் வாருயினும் செய்தே ஆகவேண்டும்; தன் கிலத்தைத் தான்ே உழுதல்வேண்டும்; தன் கிலத்தில் பிறர் வந்து துணைபுரிவர் என எதிர்பார்த்தல் இயலாது. கொள் ளுக்கு இரண்டு சால்” என்ற முறையில் நாமும் உழுகோம் என்று அரைகுறையாக உழுதல் கூடாது; அதற்கு உள் ளமும் இடத்தராது; தன்முக உழவேண்டும்; அகல உழுவதினும் ஆழ உழவேண்டும்; எல்லா கிலத்திலும் பயிர் செய்ய வேண்டியதில்லை; கிலத்தின் ஒருபகுதியில் மட்டும் பயிர்செய்தால் போதும் என்று எண்ணுதல் கூடாது; எல்லார்க்கும் தேவையான உணவுப்பொருளை உண்டாக்குதல் வேண்டும். ஆதலின், எல்லா கிலத்தையும் உழுத்ல்வேண்டும்; எவ்வளவு பெரிய கிலத்தையும் எளிதில் உழக்கூடிய இயந்திரக் கலப்பைகள் இல்ல்ை கூலிக்கு எர் . கொணர்வாரும் இலர் ; தான்் ஒருவனே உழுதல்வேண்டும் あ。 தன்னிடம் உள்ள ஒர் ஏரைக் கொண்டே உழவேண்டும்;