பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரேருழவர் 17

இன்றைக்கு இங்கிலம் ; நாளைக்கு அங்கிலம் என்ற முறை யில், ஒருநாளைக்கு ஒரு நிலமாக உழுதுவிடலாம் என்று எண்ணில்ை அதுவும் இயலாது ; அத்தகைய வாய்ப்பு அக்கால உழவனுக்கு இல்லை ; கிலத்தை உழுவது, அங் கிலம் ஈரம்பட்டுப் பக்குவமாய வழியே இயலும் ; மிக ஈரம் உள்ளபோதும் இயலாது; ஈரம் பெரிதும் புலர்ந்த வழியும் இயலாது ; இன்று இருப்பதுபோன்ற நீர் வசதி அன்றும் இருந்திருந்தால் அது இயலும் ; ஆனல் அவை அன்று இல்லை ; தன் கிலத்திற்கு வேண்டிய நீருக்கு அக் கால உழவன் வானத்தையே எதிர்நோக்கியிருந்தான்். நீர் பெறும் பலப்பல வழிமுறைகளைக் கண்டிருக்கும் இக் காலத்திலும் மழையின் வருகையை மக்கள் வேண்டி நிற்கின்றனர் என்றால், அத்தகைய வசதி யொன்றும் இன்றி, தன் தொழிலிற்கு அஃதொன்றையே நம்பி வாழ்ந்த பழங்கால மக்கள் எதற்கும் மழையையே எதிர் நோக்கி கின்றதில் வியப்பொன்றும் இல்லை.

சாவா மருந்தாம் அமிழ்தேபோல் உலகிற்கு உண வளித்துப் புரப்பது மழையே.

' வான்கின்று உலகம் வழங்கி வருதலால்

தான்்அமிழ்தம் என்று உனாம் பாற்று. (திருக்குறள்: க.க) மழை இல்லாமல் உலகம் இயங்காது ; நீர் இன்று அமை யாது உலகு ;” மழை இன்றி மாநிலத்தார்க்கில்லை ;” மழைஇல்லாது போனுல் உலகில் உயிர்களும் வாழா.

  • மாரி வறங் கூரின் மன்னுயிரில்லை ;' தலின், உலகத்து உயிர்கள் எல்லாம் மழையையே எதிர்

நோக்கி வாழ்கின்றன.

' வானேக்கி வாழும் உலகெல்லாம். (திருக்குறள்: டுச2-) மழை இல்லையேல் உழுதொழில் நடைபெருது;

ஏரின் உழார் உழவர் புயல் என்னும் வாரி வளங்குன்றிக் கால்.” (திருக்குறள்: கச) உ. பெ.-2