பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 உவமையாற் பெயர்பெற்ருேர்

அவர் அஃது ஆற்ருராயின், உலகில் பசியும் பிணியும் பகையும் கூடிப் பாழ்பல புரியும்.

  • விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியன் உலகத்து

உள்நின்று உடற்றும் பசி.” (திருக்குறள்: கங்) நிலம் வான்போல் பரந்துகிடப்பினும், நீரில்வழி அங் கிலத்தால் பயனின்றாம்; நிலமும் நீரும் சேர்ந்ததே உணவு எனப்படும் ; கிலமும் நீரும் ஆகிய இரண்டும் கூடியே இயங்குதல் வேண்டும்; நீரின்றி இயங்கும் கிலம் நன்னிலம் எனப் போற்றப்படாது ; புன்னிலம் எனத் துாற்றப்படும்.

' உணவெனப்படுவது நிலத்தொடு நீரே * - - - - - வித்திவான்நோக்கும் புன்புலம் கண்ணகன் வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே.” மழையின் மாண்பறிந்த புலவர்கள் இவ்வாறெல்லாம் போற்றிப் புகழ்ந்தார்கள்.

மழை, உழவன் வேண்டும்போது வாய்த்து வழங்கும் இயல்புடையதன்று மழை எதிர்பார்க்கும்போதும் பெய் யாது ; எதிர்நோக்கும் அளவும் பெய்யாது ; எப்போது பெய்யும் எவ்வளவு பெய்யும் என்று எவரும் கூருர் ; ஆதலின், அது வந்து வாய்த்த காலத்திலேயே அதனைப் பயன்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்; மழைபெய்தலால் பெற்ற ஈரம் பலநாள் இருத்தலும் இல்லை; அது விரைவில் உலர்ந்துபோம் இயல்புடையது ; ஒருமுறை பெய்து உழு தொழிலுக்குத் துணை புரிந்த மழை மீண்டும் வருமா? வருமாயின் எப்போதுவரும் என்பதை எவரானும் கூறல் இயலாது. ஆதலின், இந்த மழைக்கு இங்கிலம்; நாளே மழைக்கு அங்கிலம் எனவரைந்து கொண்டு உழுதல் இயலாது; மழை பெய்துவிட்ட உடனே, கிலம் பக்குவப் பட்டிருக்கும்போகே, அப்பக்குவம் கெடுவதற்கு முன் னரே, எல்லாகிலத்தையும் உழுது முடித்துவிடல் வேண் ம்ெ ; இது அக்காலச் சூழ்கிலே. இத்தகைய சூழ்நிலையினை