பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. கவைமகனும்

தலைவன் ஒருவனும் தலைவி ஒருத்தியும் ஒப்ப உயர்ந்த காதல் உடையாாய்க் களவொழுக்கம் மேற்கொண்டிருந் தனர்; அவர்கள்தம் களவொழுக்கத்திற்கு உறுதுணை புரிந்துவந்தாள் தலைமகளின் உயிர்த்தோழி. தலைமகளின் பருவம் அறிந்து காக்கவேண்டும் பண்பாடுணர்ந்த தாய், தலைமகளே வீட்டைவிட்டு வெளியேருவகை தடைசெய்து விட்டாள் ; இதனுல், தலைமகளைத் தாம் விரும்பிய இடத் தில் விரும்பிய காலத்தில் கண்டு மகிழ்தல் தலைமகனுக்கு இயலாது போயிற்று. இங்கிலேயினத் தோழி தலைமகனுக்கு உணர்த்தி, தலைவி இனி நினக்கு அரியள் என்று கூறினுள். தலைவன், தலைவிமாட்டுக்கொண்டுள்ள் அன்பு அளவிறந்தது ; அவளேக் காணுது ஒருநாள் வாழ்தலும் அவனுல் இயலாது; ஆதலின், அவன் தலைவியை நோக்கி, அவ்வாருயின், இரவிலே எவரும் அறியாவண்ணம் உங்கள் வீட்டிற்கு வந்து செல்வதை மேற்கொள்வேன்' என்று கூறினன்.

தலைவன், தலைவி உறையும் ஊரினன் அல்லன்; வேற்றார் வாழ்வோன்; இரண்டுர்க்கும் இடைப்பட்டவழி எதமில்லாப் பெருவழியன்று கழிப்ல கடந்தே வருதல் வேண்டும்; அக்கழிகளோ என்றும் வற்றுதல் அறியா நீர்வளம் உடையன; ஆழம் மிக்குக் கருகிறம் பெற்ற கழிகள் அவை; முதலைகள் பெருங்கூட்டமாய் வாழும் அவற்றில்; முதலைகளுள் ஆண்முதலைகள் ஆற்றலிற் சிறந்தன; தம் வளைந்த கால்களைக் கொண்டு வழிவரு வாரைக் கவ்வி ஈர்த்துக் கொல்லும் இயல்புடையன; முதலைகளின் இக்கொடுமை அறிந்து அவ்வழியே செல்ல எவரும் அஞ்சுவர்; இத்தகைய கொடுமைமிக்க வழியிலே அவன் வருதல் வேண்டும்; இதை உணர்வாள் தோழி. 'தலைவன், கொடுமைமிக்க வழியிலே, இரவிலே வாத் துணிகின்ருன்; அவன் தலைவிமாட்டுக் கொண்டுள்ள போன்பே இதற்குக் காரணம்; இத்தகைய அவன் அன்பை