பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவைமகனர் 47

மதியாது, அதற்கு ஊறுசெய்து, வாராதே’ என அவனே விலக்குதல் கூடாது' என்றும் உணர்ந்தாள்; ஆனல் தடைசெய்யாது விடினே, அவன் இாவில் வருதலை வழக்க மாகக் கொள்வன் ; தலைவன் பேராற்றல் வாய்ந்தவனே எனினும், யானேக்கும் அடிசறுக்கும் என்ப; ஆதலின், தவறி அவனுக்கு இடர் உண்டாயிலும் உண்டாம். எனவே, அவன் இரவில் வருதலைத் தலைமகள் விரும்புவாள் அல்லள்; அவன் வரும் வழியின் எதம்கண்டு வருந்து வாள். ஆகவே, தலைவன் விரும்புமாறு அவன் இரவு வருகைக்கு வரவேற்பளித்தல் கூடாது எனத் துணிந்தாள்.

துணிந்த தோழி தலைமகனே நோக்கி, தலைவ! நீயோ, கின் அன்புடைமையால் ஆற்றின் அல்லல் கண்டும் அஞ் சாது வரத்துணிகின்றன ; அத்தகைய அன்புடைய கின்னே வாரற்க என்று கூற என் உளம் அஞ்சுகிறது; ஆனால், அவளோ, கின் அன்பின் ஆழத்தையோ, ஆற்ற லின் பெருமையினேயோ அறியாளாய், கொடியவழியில் இாவில் வருதலை எண்ணி எண்ணி வருந்துகிருள்.

“அவள் வருத்தம் மிகுமாறு வருக என்று கூறவும் என் உளம் அஞ்சுகிறது; வாரற்க என்று கூறின் கின் உள் ளம் வருந்துமே என்றும் அஞ்சுகின்றேன்; வருக என்று கூறினல் அவள் உள்ளம் வருந்துவது கண்டும் அஞ்சு கின்றேன்; என் செய்வதென்று அறியாது விழிக்கின் றேன் ; கின் அன்பின் பெருமையை, கின் ஆற்றலின் சிறப்பை அவளுக்கு அறிவுறுத்தி, கின் வருகையினே விரும்பியேற்குமாறு செய்யலாமெனிலோ, அவள் நீ வரும் வழி ஏதம் கண்டுகொண்ட அச்சம்தவிர வேறு எதையும் அறியும் அறிவுடையளாய்த் தோன்றவில்லை.

அறிவற்றநிலையில் உள்ள அவளேக் காரணங்காட்டித் தெளிவித்தல் இயலாது; காரண காரியங்களை அறிந்து தெளியும் அறிவு இப்போது அவள்பால் இல்லை; ஆகவே 'வருக என நினக்கு இசைந்து, அதை ஏற்றுக்கொள்ளு. மாறு அவளிடம் கூறுதல் இப்போது இயலாது. -