பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்புரிப் பழங்கயிற்றினர் 8器、

இறுதிவரை வெற்றி தோல்வி காணமாட்டாமல் மாண்டு மடிந்தவர்; ஆசைக்கு அடிமைப்பட்ட உள்ளத்தைத் தமக்கு அடிமை கொண்ட அறிவுடையவர். முதல் வகையைச் சேர்ந்தோர், ஆசை தவறு என்று உணரும் உணர்ச்சியே இல்லாதவர்; தக்க இன்ன, தகாதன இன்ன என்று உணரமாட்டா முதன்மையான விலங்கினத்தைச் சேர்ந்தவர்; ஆதலின், அவர்கள் மக்கள் என மதிக்கும் தகுதி உடையாால்லர் ; மூன்றாம் வகையினர் முற்றும் துறந்து முழுமுதற்றன்மை பெற்றவர் ; மக்கட்கு மேலாம் கிலையினே யெய்தி மாண்புற்றவர் ; ஆக இவ்விருவர்க்கும் உலகவாழ்வோடு உறவு இல்லை ; உலகவாழ்வோடு உற வுடையவர், ஆசையும் உடையாய், அதன் இயல்புணர்ந்து அடக்கி ஆளவேண்டும் என்ற எண்ணமும் கொண்டு ஒயாது போர் புரிபவராவர். -

அத்தகையார் கிலே, அந்தோ! மிகமிக வருந்தத்தக்க தாம்; அவர் தம் உள்ளத்திற்கும் அறிவிற்கும் நடை பெறும் போர், அம்மம்ம கொடிது கொடிது அவற்றுள் ஒன்று அழிய, ஏனையது வெல்லும்வரை போர் ஒயாது ; இரண்டும் ஈடு இணையில்லா ஆற்றல் உடையவை; ஆதலின், போர் மிகமிகக் கடுமையாகவே இருக்கும்; அது ண்ேட காலப் போராகவும், ஆயுட்காலப் போராகவும் ஆகும்; இரு பெரும் படைகள் கின்று போரிடும் போர்க்களமும், அதைச் சூழ உள்ள இடமும் எத்தனைப் பாழுறும் என் பதைப் பார்த்திருக்கிருேம். ‘. . . -

அறிவிற்கும், ஆசைக்கு அடிமைப்பட்ட உள்ளத்திற் கும் நடைபெறும் இப்போராட்டம் கிகழும் இடமாகிய ஒருவன் உடல்கிலே என்னும்! எத்துணைக் கேடுறும் அவன் உடற்கேட்டை வாயால் உர்ைக்கவும் படுமோ? இத்தகைப் போராட்டத்தால் அழிந்தார் தாம் எத்தனை எத்தன் கோடி? அதை எண்ணிப் பார்த்தலும் இயலுமோ ? இப் போராட்டத்தால் அவர் உடல் அழிவது உறுதி என்ரு, அம், அவர் உயிர் போற்றப்படும்; புகழப்படும்; வணங்கவும்