பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. உவமையாற் பெயர்பெற்றேர்

படும்; ஆதலின், ஆசைக்கு அடிமைப்பட்டு அழிந்துவிடா வண்ணம் உள்ளத்தை அடக்கி ஒருவழி கிறுத்தவேண்டும் என்ற உணர்வு வரப்பெற்ற உன்னுடையோர் உலகத்தில் மிகச் சிலரே எனினும், அம்மிகச் சிலராலேயே இவ்வுலகம்

இயங்குகிறது.

' உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே

கிகழ்ச்சி அவர்கட் டாக லான ’

என்ப.

உள்ளமும் அறிவும் ஒருவழி கில்லாது, மாறுபட்டுப் பொரும் இப்போராட்டக் கொடுமையினே உணர்ந்த ஒரு புலவர், அதை அழகிய ஒர் உவமையால் நன்கு விளக்கி புளளாா. -

அண்மையில் மணம் முடித்துக்கொண்ட இளைஞன் ஒருவன் ; இல்லிருந்து நல்லறமாற்றி வையத்துள் வாழ் வாங்கு வாழவேண்டும் என்ற கல்லுள்ளம் உடையவன்; அறவோர்க்கு அளித்தலும், அந்தணர் ஒம்பலும், துற வோர்க்கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடலும் இல்லறத்தார்க்கு இயல்புடைப் பண்பாம் என உணர்ந்தவன்; இசையும், இன்பமும், ஈதலும் மூன் அறும் அசையுடன் இருந்தோர்க்கு ஆகாது என்ற அறிவும் உடையான் ; ஆதலின், அழகும் அன்பும் நிறைந்த தன் ஆருயிர் மனேவியைப் பிரித்து பொருள் சேர்க்க வேண்டி வேற்றார் கோக்கிப் புறப்பட்டு விட்டான்; அவளேப் பிரிந்து வந்துவிட்டானே ஒழிய, இடைவழியில் அவள் அழகும் அன்பும் அவன் உள்ளத்தைத் தன்பால் ஈர்த்துக் கொண்டே இருக்கலாயின. - -

. . . . . . ಹನ್ದ, காது, நாக்கு, மூக்கு, உடல் ஆகிய இவற்றுள் ஒன்றின் வழியாகப் பெறும் இன்பத்திற்கே அடிமையாகி விடும் இயல்புடையது உள்ளம்; பெண்களோ, இவ் ஐவ. கைப் பொறியானும் பெறும் இன்பம் அனைத்தையும் ஒருங்கே உடையவர் என்ப. - . . . .” •, -