பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேய்புரிப் பழங்கயிற்றினர் 85

'கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள.' (திருக்குறள்: சகoக)

ஆதலின், மனித உள்ளம் மகளிர்பால் எளிதில் இரங்கிவிடும் இயல்புடையதாகும்; இளைஞன் மனைவியோ பேரழகும், பேரன்பும் உடைய பெண்மணியாவாள் ; பின்னிவிடப் பெற்றுப் பின்புறத்தே தாழ்ந்துகிடக்கும் கூந்தல் அழகையும், நெய்தல்மலர்போல் கிறங்கொண்டு அருள் ஒழுகும் கண்களின் அழகையுமே ஆயுட்காலம் முழுதும் கண்டு மகிழலாம் போல் தோன்றும்; ஆதலின், இளைஞன் உள்ளம், அவள்பால் கொண்ட ஆசைக்கு அடிமையாகிவிட்டதில் வியப்பொன்றும் இல்லை; மேலும், அவன் பிரித்து வருகையில், பொருள்வயிற் பிரிதல் ஆட வர்க்கு இயல்பு என்ற உலகியற்கு அஞ்சிப் பிரிவிற்கு உடன் பட்டாள் எனினும், இதற்கு முன் சிறிது காலமும் பிரிக் தறியா இவனைப் பிரிந்து எவ்வாறு இத்துணைக் காலம் ஆற்றி வாழ்வேன்' என்று எண்ணி எண்ணி வருந்தியே வழி அனுப்பினுள் அவள் அழகிற்கும் அன்பிற்கும் மேலாக, அக் காலே அவள் கொண்ட துயர்நிலை அவன் உள் ளத்தை மிகுதியும் வருத்துவதாயிற்று ; அதனல், அது அவள் ஆசைக்கு முழுதும் அடிமையாகிவிட்டது.

உடனே அது, வழியே சென்று கொண்டிருந்த இளை ஞன் கால்களைத் தளத்துவிட்டது. அன்பும் அழகும் உடையாரைப் பிரிந்து வருவதே தவறு; நமக்கு இன்பம் தருவார் வருந்த விட்டுவருவது மேலும் தவரும்; அவர் துயர் போக்கவேண்டிய கடமை கருதியாவது மீண்டு வீடு அடைதல் வேண்டும் என்றது; இளைஞன் ஏற்கெனவே காதலால் கட்டுண்டவன் ; காதலால், தான்் பண்டு பெற்றி ருந்த நாணயும் நல்லாண்மையையும் இழந்து பெற்றவன் s அத்தகையான், தன்னல் காதலிக்கப் பெற்ருளின் துயர் கிலையினைப் பிறர் எடுத்துக்காட்டிய பிறகும், அவர்பால் சென்று அவர் துயர் போக்காது, வேறு வினேமேற் செல் லத் தயங்குவானுயினன் ; ஆகவே அவன் ஆங்கேயே கின்று விட்டான். *: - -