பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 உவமையாற் பெயர்பெற்ருேர்

பொருள் சேர்க்கும் நன்முயற்சியில் முனைந்து முன் வந்த இளைஞன், திடீர் என கின்றுவிட்டதையும், அவனுக்கு அவன் உள்ளம் கூறுவனவற்றையும், அவ்வுரைகேட்டு அவள் மயங்கி நிற்பதையும் அவன் அறிவு உணர்ந்தது; உடனே அது, அவள் உள்ளத்தை நோக்கி, "எவ் வினையும் தொடங்காமல் இருப்பது நன்று; தொடங்கினல், அதைக் குறைவற முடித்துவிடுதல் வேண்டும்; தொடங்கி இடையே மடங்குதல் மாண்புடையார்க்கு அழகன்று : ஆகவே எண் ணித் துணிக' என்ப; தொடங்கிவிட்டோம்; இடையே கைவிடுதல் அறியாமை மட்டும் அன்று ; நம் செயல் பிற ரால் இகழவும்படும்; ஆதலின் மேற்கொண்ட வினேயை மறந்து வறிதே மீளுதல் அறிவும் அன்று ஆண்மையு. மாகாது; ஆகவே, உள்ளமே ! நீ விரைந்து எதையும் முடிவு செய்துவிடாதே; சிறிது பொறுமையோடிரு; அவன் முயற்சியைத் தடைசெய்யாதே ” என்று கூறலாயிற்று.

அறிவின் அறவுரை கேட்ட இளைஞன் கால்கள், உள் ளத்தின் வழியே ஊர்கோக்கிச் செல்வதை நிறுத்திக் கொண்டன; உள்ளம் பின்புறம் ஈர்ப்ப, அறிவு முன்னே உந்த, இளைஞன் செய்வதறியாது முன்னுேக்கியும் செல் லாது, பின்நோக்கியும் வாராது கின்ற கிலேயிலேயே இருப் பானுயினன்; உள்ளம் காட்டிய காதலியின் துயர்நிலை அவனை வீடுநோக்கிச் செல்லத் தூண்டும் பிறரால் பழிக் கப்படுவாய் என்ற அறிவின் அச்சுறுத்தல், உள்ளம் வழிச் செல்வதைத் தடுக்கும்; இவ்வாறு உள்ளத்திற்கும், அறி விற்கும் இடையே உண்டான இப் போராட்டத்தில் ஒரு 'பரற்றுணியமாட்டாமல் இளைஞன் வருந்தி வாடலாயினன்; இத்தகைய போராட்டத்தின் விளைவால், தன் உடல் கெட்டு அழிந்துவிடுமோ என்று அஞ்சின்ை ; அஞ்சின்ை கண்

முன் வந்துகின்றது. ஒரு காட்சி.

இரண்டு பெரிய ஆண் யாண்கள் மதங்கொண்டு மாறு பட்டுப் போரிடுகின்றன ; அவை இரண்டின் போராட்டத் தின் நடுவிடமாக அமைந்துவிட்டது ஒரு கயிறு, யானைகள்