பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-உவமையாற் பெயர் பெற்றோர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கச வில்லக விரலினும்

புல்லிதழ் பூவிற்கும் உண்டு ' என்ப. கற்பே பொற் பெனக்கொண்ட தலைவி, அறிவே உருவென வந்த தோழி, அருள் வடிவாம் செவிலி, அன்பின் திருவுருவாம் நற்ருய் போன்ற மகளிர்குல மாணிக்கங்கள் வாழ்ந்த தமிழகத்தில், பரத்தையர் போன்ற பண்பிலா மகளிர் சிலரும் வாழ்ந் திருக்கக் காண்கிருேம் தலைவி, கோழி, நற்ருய், செவிலி முதலாம் உயர்குலமகளிர்தம் மாண்புகளைப் பாராட்டிப் ப்ரவும் பழந்தமிழ்ப் பாடல்கள், பரத்தையர் என்ற இப்பழி கிறை மகளிரைப்பற்றியும் பகர்கின்றன. பரத்தைய ரொழுக்கம் தமிழகத்தில் பண்டுகொட்டே இருந்தது என் பது தமிழர் தம் நாகரிகப் பண்பாட்டிற்கு ஒர் இழுக்கே.

பரத்தையர்ப் பிரிவு பழந்தமிழ்ப் பாடல்களில் இடம் பெற்றமைக்குப் புலவர்கள் பலவாறு அமைதிகாண முயல் வர். தலைவியின் ஊடலுக்குக் காரணம் வேண்டும் என்ப தற்காகப் புலவர்கள் படைத்துக்கொண்ட ஒரு துறையே பரத்தையர் பிரிவு என்பர் சிலர். பாத்தையர் உறவு மேற் கொண்டு, தலைமகன் ஒழுக்கத்தின் இழுக்கிய காலத்தம், தலைவி தன்கிலையில் சிறிதும் மார்மல் அத்தலைவன் மாட்டுக் குறையாத அன்புகொண்டொழுகினள் எனக் கூறித், தலைமகளின் கற்பின் பொற்பினைக் குன்றிலிட்ட விளக் கெனத் தோன்றச் செய்யவே இப் பரத்தையர்ப் பிரி வொழுக்கம் மேற்கொள்ளப்பட்டது என்பர். மற்றும் சிலர், மணிவாசகப்பெருந்தகையாரின் திருச்சிற்றம்பலக் கோவைக்கு உரைகண்ட பேராசிரியர், ' பாத்தையிற் பிரி வென்பது கலழகளே வரைந்தெய்திய பின்னர், வைகலும் பாலே நுகர்வாைெருவன் இடையே புளிங்காடியும் நுகர்ந்து அதன் இனிமையை நுகர்த்தாற்போல், அவள் நகர்ச்சியின் இனிமையறிவதற்குப் புறப்பெண்டிர்மாட்டுப் பிரியா கிற்றல் அல்லது உம், பண்ணும் பாடலும் முத லாயின காட்டிப் புறப்பெண்டிர் தன்னைக் காதலித்தால் தான்் எல்லார்க்குங் தலைவனதலின் அவர்க்கும் இன்பம் . செய்யப் பிரியாகிற்றல் என்றுமாம் ; அல்லது உம் தலை