பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-ஔவையார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஔவையார் வரலாறு

55

வாளால் வெட்டி, "வீரப்புண் பெற்று மாண்டாரைப் போன்றே இவர்களும் வீரசுவர்க்கம் பெறுக!" என வேண்டின் அவர்களுக்கும் அது கிடைக்கும் என்பதையும் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலை எய்தியோர் அருகே, வெண்கடுகுப்புகை எழுப்பின், அப் புகைகண்டு அஞ்சி எமன் வாரான் என்பதையும் நம்பி வாழ்ந்தனர், ஒளவையார் காலத் தமிழர்கள்; அவர்கள் இறந்தோர் உடலைச் சுட்டும், கல்லை நட்டு, அக் கல்லிற்கு ஆடையும், பீலியும் சூட்டிச் சுட்ட இடத்தே, இறந்தவர் பீடும், பெருமையும் பொறித்து வழிபாடு செய்தும் வாழ்ந்தனர்; பிறந்த மகன் முகத்தைத் தந்தை காண்பதையும், மாலையில் மகளிர் மாளிகைகளில் மணிவிளக்கேற்றுவதையும் வழக்கமாகக் கொண்டனர் அவர்கள், ஊரில் வாழும் இளஞ் சிறுவர்கள், நீர்நிலை தேடிச்சென்று, அந்நீர் கலங்கக் குதித்து ஆடுவதோடு, அந் நீர்நிலைக்கு நீராடவரும் அரசயானையின் கொம்புகளைப் பிடித்துக் குதித்து ஏறி அவற்றைக் கழுவி முடிப்பர் என அக் காலச் சிறுவர்களையும் விடாது படம் பிடித்துக் காட்டி யுள்ளார் நம் பைந்தமிழ்ப் பாட்டியார்.

நாம் இப்போது கண்ட இத்தமிழகமே, ஒளவையார் கண்டு மகிழ்ந்து பாராட்டிய பழந்தமிழ் நாட்டின் படமாம்.