உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொச்சி கியமங்கிழார் 119 திற்குரிய காரணத்தைக் காணமாட்டாமல் வருந்தும் தாயிடம், நோயின் உண்மைக்காரணத்தை உரைத்தலே, தாயின் வருத்தமும், தன் துயரும் போதற்கு வழியாம் என உணர்த்த தலைமகள், தாயிடம் அவ்வாறே உண் மையை உரைத்துவிடு எனத் தோழிபால் உர்ைப்புழி, உரைக்குங்கால், குறிப்புமொழியால் உணர்த்துவாயாக நம் உயிரே போவதாயினும், நாணே மறந்து, அவன் தந்த நோய் இது என வாய்விட்டுக் கூறற்க எனக் கூறினுள் எனப் பாடிப் பழந்தமிழ்மகளிரின் பண்பட்ட வாழ்க்கை யினைப் பாரோர் உணர வழி செய்த புலவர் நொச்சிகியமங் கிழார்க்குத் தமிழ்ப்பெருமக்கள் தம் நன்றியறிதலை எவ் வழிக் காட்டுவரோ அறியேம் ! '. " நாடன் நெஞ்சமர் வியன்மார் புடைத்தென அன்னேக்கு அறிவிப்பேங் கொல் அறிவியேங் கொல் என இருபாற்பட்ட சூழ்ச்சி, ஒருபாம் - சேர்ந்தன்று வாழி தோழி! யாக்கை இன்னுயிர் கழிவதாயினும், நின்மகள் ஆய்மலர் உண்கண் பசலை காமநோய் ' எனச் செப்பாதிமே. ” (அகம் :நிஉ) பொருள் வயிற் பிரிந்தான் விரைவில் வந்திலனே என வாடும் ஒரு தலைமகளுக்கு, - செல்வாால்லர் நம் காதலர் ; செலினும் நோன்மாால்லர் கோயே ; மற்றவர் கொன்னும் நம்புங்குரையர் தாமே ; சிறந்த அன்பினர் ; சாயலும் உரியர்: பிரிந்த நம்மினும் இாங்கி, அரும்பொருள் முடியாதாயினும் வருவர் : (சற் : உ0அ) எனத் தலைமகனின் இனிய பண்புகளை கிரலே எடுத்துக் கூறி ஆற்றும் அவள் தோழியின் அறிவுடைமையினேப் புலவர் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.