உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கிழார்ப் பெயர்பெற்ருேர் களித்து, தோகைவிரித்து ஆடும் மயில் ஒன்றைக்கண்டான்; அதன் ஆடலைக்கண்டு மகிழ்ந்த அவன், தன்னைப்போன்றே அதுவும் குளிரால் நடுங்குகிறது ; ஆகவேதான் அவ்வாறு ஆடுகிறது என்று எண்ணினுன் ; உடனே தான் அணிந்து வந்திருந்த விலைமதிக்க ஒண்ணு அழகிய போர்வையை அதன் மீது போர்த்திவிட்டு அரண்மனை சென்ருன் ; பேகனின் அருள் உள்ளத்தையும், அவன் கொடைச் சிறப்பையும் விளக்கும் இச்செயலை அக்கால மக்கள் அனே வரும் அறிந்து மகிழ்ந்து பாராட்டினர். கொடையாலும், கொற்றத்தாலும் சிறந்த பேகன்பால் தியொழுக்கம் ஒன்றும் குடிகொண்டிருந்தது; பேகன், அழகே உருவ்ெனவந்த, கற்பே காரிகையர்க்குப் பொற் புடை அணியாம் எனக் கருதும் கண்ணகி என்பாளை மனேவியாகப் பெற்றிருந்தும், அவள் உண்ணுதும், உறங் காதும், நல்லன. உடாதும் இருந்து ஒயாது அழுது கிற்கு மாறு அவளேக் கைவிட்டு, நல்லூரில் வாழ்ந்த பாத்தை யொருத்தியோடு உறவுகொண்டு, அவளோடு, அவள் ஊரில் வாழ்வதை விரும்பி மேற்கொண்டிருந்தான். பேகனின் கொடையும், கொற்றமும்கண்டு பாராட்டிய புலவர்கள், அவன் தீயொழுக்கம் உடையான் என்பது கண்டு அவன்பால் வெறுப்பும், அவன் தீச்செயலால் வருந்தி வாடும் அவன் மனே விபால் இரக்கமும் கொண்ட னர்; பேகன் தவறினுன் எனினும், திருத்தி நல்வழிப் படுத்தல்கூடும் என்று நம்பினர் ; உடனே, பேகன் வாழும் நல்லூர் சென்றனர் ; அவனுக்கு அறிவுரை பல கூறினர் ; புலவர்கள் அறிவுரை கேட்டும், அவர்வழி கடவாது மறுக்கும் மதியிலான் அல்லன் பேகன் ; தேர் ஏறித் தன் வீடடைந்தான். வழுக்கிவீழ்ந்த வையாவிக்கோவை வாழ வைத்த புலவர்களுள், அரிசில்கிழாரும் ஒருவராவர்; அவர் அவனுக்குக்கூறிய அறிவுரை அடங்கிய அழகிய பாட் டொன்று புறநானூற்றில் இடம் பெற்றுளது. # " கின்நாடு நோக்கி வந்து, செவ்வழிப்பண் இசைத்து, கின்னேயும், கின் நாட்டையும் பாடிகிற்க, அதுகேட்டு