பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 பெண்பாற் புலவர்கள்

எறுபோல் நடையுடையான்; கிமிர்த்து திரண்ட தோளு டையான்; அடர்ந்து சுருண்டு கருத்த மயிருடையான் ; கலீர் கலீர் என்ற ஒலியும், காண்டற்கினிய அழகும் வாய்ந்த கழல்புனே காலுடையான் ; கரிய கச்சினே அரை யிலே கட்டிப் பசும்பொன்னலாகிய ஒலிக்கும் பாண்டில் மணிகளை அக் கச்சின் மீது அழகுபெற அணிந்தவன்; வகைவகையான மலர்கொண்டு வனப்புமிக அமைந்த மாலை யினே மார்பிலே அணிந்தவன் ; ஆற்றல் மிக்கோன் ; ஆற்றுப் புனலில் குதித்து ஆற்றல்கோன்ற ஆடிப் பழகியோன் ; அதல்ை ஆட்டன் அத்தி (ஆடுதலில் வல்ல அத்தி) என்

சிறப்புப் பெயரும் பெற்ருேன், -

ஆடிப் பழகிய அவல்ை அமைதியாய் அமர்ந்து அவ் வாடல்ேக்காண இயலவில்ல்ை; ஆடை அணி அணிந்து ஆற்றில் குதித்தான் ; விழாக்கான வந்திருந்தோர் அனைவரும் சிண்டுமகிழ அருமையும் அழகும் தோன்ற ஆடிக்கொண் டிருந்தான். அத்தி, அங்கிய நாடாகிய சேரநாட்டான்; காவிரியாற்றில் அதற்குமுன் ஆடிப் பழகியறியான். ஆத வின், அவல்ை அவ்வாற்றுப் பெருக்கின் ஆற்றலை அறிந்து கொள்ள முடியவில்லை, அதனல் ஆற்றுப்புனலில் ஆட வல்ல அவனே, அக் காவிரிப்புனல் அழுத்தி இழுத்துக் கொண்டு போய்விட்டது. ஆற்றில் ஆடிக்கொண்டிருக்த அவனே அங்கே காணுத மக்கள் அவலமுற்று அவனேத் தேடுவதில் ஆர்வங் கிட்டலாயினர். ஆற்ற் வெள்ளத்தின் விரைவு அவனே வெகு தொலைவு கொண்டுபோய் விட்டபடி யால், அவர்கள் அவனே அத்துறைக்கண் தேடியும் கான மாட்டாமல் கண்ணிர்விட்டுக் கலங்கி கின்றனர்.

தந்தை கரிகாலன் அருகே யமர்ந்து தம் காதற் கொழுநன் அத்தியின் ஆடல்கண்டு அகமகிழ்ந்திருந்த ஆகி மந்தியார்க்கு அவன் மற்ைவு, ஆற்ருெணுத் துயர் அளித் தது. ஆற்றுப்புனலின் ஆற்றலே எதிர்க்கும் ஆற்றல் அற்றுப்போனவிடத்து அப்புனல் வழியே தாமும் சென்று கரையேறவே அறிவுடையோர் முயற்சிப்பர். ஆடும்