பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒக்கூர் மாசாத்தியார் 17

லிருந்தும் ஒர் ஆள் செல்லவேண்டுமே என்று எண்ணி ள்ை; எண்ணியவள் ஏக்கம் மேற்கொண்டாள் ; காரணம், போருக்குச் செல்லத்தக்க போாண்மை மிக்க ஆண்மகன் ஒருவனும் அவள் வீட்டில் இல்லை; அவள் ஆண்துணை அற்றவள் அன்று ; உடன்பிறந்த ஆண்மக்களையோ, மணந்த கணவனேயோ பெருதவள் அன்று ; அத்தகைய உறவினரைப் பெற்றே இருந்தாள்; ஆல்ை, சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற போரில் கலந்துகொண்டு, பகைவர் யானைப்படையைப் பாழ்செய்துவிட்டுக் களத்திலேயே மாண்டு மறைந்துபோனுன் அவள் அண்ணன் ; முன்னுள் நடைபெற்ற போரில், பகைவர் யானைவரிசைகளை எதிர்த் துப் போரிட்டு இறந்துபோனன் அவள் கணவன் ; இருந்த ஆண்மக்கள் இருவரும் இவ்வாறு இறந்துவிட்டனர் ; அவர்கள் இறந்துவிட்டனரே என்று அவள் கவலை கொள்ள வில்லை ; இன்று நடைபெறப்போகும் போருக்குத் தானும் ஒரு வீரனே அனுப்பமுடியவில்லையே, என்றே கலங்கிளுள் ; கலங்கி கின்றவள், சிறிது நேரத்துக்கெல்லாம் எதையோ எண்ணிக்கொண்டவள்போல் தெருக்கோடிக்கு விரைந் தோடினள். அவள் மகன் அங்கே மயிரை விரித்துக் கொண்டு மண்ணில் புரண்டு ஆடிக்கொண்டிருந்தான். ஒரே மகன்; ஆடும் பருவம் கடவாத இளைஞன் ; அவன் கையைப் பிடித்து அழைத்து வந்தாள்; வீட்டினுட் கொண்டுசென்று நீராட்டினுள் ; பெட்டியில் மடித்துவைத்திருந்த தூய வெள்ளிய ஆடையை எடுத்து விரித்து உடுத்தினுள்; பறட் டைத்தலையில் எண்ணெய் தடவி வாரி முடித்தாள் ; அவள் முன்னேர் ஆண்ட வேலைக் கையிலே கொடுத்தாள் ; தெரு விற்கு அழைத்துவந்து, “அதோ, அங்கேதான் நடை பெறுகிறது போர் ; போ அங்கே விரைந்து” என்று வழி காட்டி அனுப்பி, அவன் செல்லும் திசைநோக்கி கின்ருள். அவள் வரலாற்றினையும், அன்று அவள் கடந்துகொண்ட செய்கைகளையும் கண்டனர் அத்தெருவார். அவருள்ளம் திடுக்குற்றது. 'என்னே இவள் துணிவு இவள் செயல், அம்ம! அம்ம!! கொடிது கொடிது 1 மறக்குடி மகள் என்பது இவளுக்கே தகும்” என்று வியந்து பாராட்டினர்.

பெ. பு-2