பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கைபாடினியார் நச்செள்ளையார் 31

சைப் படுத்தப் பெற்றுள்ளன. அப் பாடல்களேக் கேட்டு மகிழ்ந்த சோலாதன், நச்செள்ளையார்க்குப் பரிசிலாக நூருயிரம் காணமும் கொடுத்து, அணிகலன் ஆக்கி அணிந்து கொள்க’ என்று ஒன்பது காப் பொன்னும் கொடுத்தான். அஃதோடு அமைதி கொள்ளாது தன் அரச அவையில், தன் அரியணைக்கு அண்மையிலேயே அவர்க்கு இடமும் அளித்துச் சிறப்புச் செய்தான்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார் வரலாருக நாம் அறியக் கூடியன எல்லாம் இவ்வளவே அவர் ஒரு பெண் பாற் புலவர்; புலவர்களும் போற்றும் புலமை வாய்ந்தவர்; கண்டீரக்கோப் பெருநள்ளியின் காலத்தே வாழ்ந்தவர் ; மேற்குக் கடற்கரைத் துறைமுகப் பட்டினங்களுள் மிகச் சிறந்த துறைமுகமாகிய தொண்டிநகரை அறிந்தவர் ; ஆடு கோட்பாட்டுச் சேரலாதனப் பாடிப் பரிசில் பெற்றவர்; அணிகள் பல அணிந்து கொள்ளத்தக்க இளமைப் பருவ வத்திலேயே பெரும் புலவராய்த் திகழ்ந்தவர்; இவையன்றி அவர் வாலாருக வேறு எதையும் அறிய முடியவில்லை.

வீர உணர்ச்சியையும், காதல் உள்ளத்தையும் விளங்க உரைக்கும் அவர் பாடல்கள் இரண்டைக் கண்டோம் ; இனி ஆடுகோட்பாட்டுச் சேரலாதனப் பாராட்டி அவர் பாடிய பாடல்கள் சிலவற்றைக் கண்டு அவர் புலமையின் நலத்தைச் சிறிது நுகர்வோம். .

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தன்னைச் சேர்க் தோர்க்கு இனியன் ; சோதவர்க்கு இன்னன் ; கொடியன் என்ற அவனியல்பை விளக்க விரும்புகின்ருர் புலவர்; கடற்கரையைச் சேர்ந்த ஒரு பொழில்; அதில் நெய்தல் மலர்களால் அணி செய்யப்பெற்ற அழகிய பந்தல்; அப் பந்தலில் அரசர் பலர் அமர்ந்துள்ளனர்; அழகிய விறலியர் ஆடல் புரிகின்றனர்; ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அவ ரிடையில் அமர்ந்து விறலியர் ஆடலைக் கண்டும், பாடல்க்

கானம்-பழங்காலத்தில் வழங்கிய செலாவணி எனயம் + கா-பழங்கால ஒரு நிறுத்தலளவை.