பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ, காமக்கணிப் பசலையார்

பசலையார் என்ற பெயர், பசலை என்ற நோயின் இயல்பைப் பாடிய காரணத்தால், மாருேக்கத்து நப்பசலை. யார்க்கே உரியது என்ருலும், அக் கால மகளிர் பலரும், அப் பெயரைத் தாமும் வைத்துக் கொண்டிருந்தனர். குமிழி ஞாழலார் நப்பசலையார், பேசந்தைப் பசலையார் என்ற பெயர்களைக் காண்க; அத்தகைய மகளிருள் காமக்கணிப் பசலையாரும் ஒருவர். பசலையார் என்ற பெயரை எவ்வாறு மகளிர் பலரும் வைத்துக் கொண்டிருந்தனரோ, அவ்வாறே காமக்கணி அல்லது காமக்கண்ணி என்ற பெயரையும் அக்கால மகளிர் பலரும் தங்கள் பெயராக வைத்துக் கொண்டிருந்தனர் : வெறிபாடிய காமக்கண்ணியார் என்ற பெயரைக் காண்க. இவர், அவ்விரு பெயரையும், தம் ஒரு பெயராகக் கொண்டுள்ளார். மதுரை காமக்கணி நப்பாலத்தனர் என்ற புலவர் ஒருவர், அகநானூறு பாடிய புலவர் வரிசையில் காணப்படுகிருர், காமக்கணி என்ற தொடர் இருவர் பெயரிலும் வருவதைக்கண்டு, இருவரை யும் ஒருவராகக்கொண்டு, காமக்கணி நப்பசலையார் மதுரை யில் வாழ்ந்த நல்லிசைப் புலமை மெல்லியலார் என்று கூறுவர் சிலர்.

இவர் பாடிய பாட்டாக நமக்குக் கிடைத்தது நற்றிணே யில் வரும் பாட்டொன்றே ஒன்றேயாயினும், அது அழகு நிறைந்து அறிவுரை பல கூறும் ஆற்றல் வாய்ந்து காணப் படுகிறது.

இளவேனிற்காலம், கணவனும் மனேவியும் கலந்து வாழவேண்டிய காலம்; சோலைக் குயில்கள் தம் பெடை யோடு இணைபிரியாதிருந்து இன்பும் அனுபவிக்கும் காலம்; இத்தகைய காலத்தே ஒருத்தியின் கணவன் பொருள் தேடிவரப் பிரிந்து சென்றுவிட்டான். நாம் வாழ்க்கை பில் இன்பத்தை நுகர்ந்து வெறுத்துவிட்ட முதியோர் அல்லர் ; நல்ல இளமையுடையோம் ; இன்ப உலகில் இப். போதுதான் அடியெடுத்து வைத்துள்ளோம்; அவ்வா