பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெண்பாற் புலவர்கள்

பலாக்குவது போன்ற தவறுகளைச் செய்யாது இருப்பதே தமிழறிஞர் தமிழ்மொழிக்கு ஆற்றும் கடம்ை.

தாம் பாடிய குறிஞ்சித் திணைப்பாட்டில் வரும் தலை மகள், தலைமகன் தன்னை விரைவில் வரைந்து கொள்ளாது வாழ்கிருன் என்பதை அறிந்தும் அதுகுறித்து வருந்தாது இருக்கிருள், அஃது எவ்வாறு எனக் கேட்பாள்போல் அவள் முகம் நோக்குகிருள் தோழி; அதற்கு அவள் தலை வனேக் கண்டு உறவுகொண்ட அந் நாளில், பிரியேன் ; பிரி யின் தளியேன் , அறனல்லன செய்தவனுமாவேன்' என்று குளுரைத்துள்ளான் தலைவன்; அவ்வாறு சூளுரைத்த அங் காளை நினைக்குந்தோறும், அவன் வரைந்துகொள்வது உறுதி என்ற எண்ணம் தோன்றுகிறது; அதனல், என் உள்ளம் துன்புறுவதில்லை ; இதுவே என் கருத்து ; தோழி ! இதில் சின் கருத்து யாது?’ என்று கூறுகிருள். தலைவன் தெளித்த சொல்லைத் தேறியிருப்பதே தமிழ் மகள் கடன் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்

தமிழ்நாட்டு பெண்பாற் புலவராகிய குறி எயினியார்.

“நின்குறிப் பெவனே தோழி! என்குறிப்பு என்னெடும் கிலேயா தாயினும், என்றும் நெஞ்சுவடுப் படுத்துக் கெடவறி யாதே...... சாால் நாடனெடு ஆடிய நாளே.' (நற்றிணை: கூடு)ை