பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பெண்பாற் புலவர்கள்

கார் கபிலர்; மற்ருெருத்தியைத் தெய்வீகனுக்குத் திரு மணம் செய்து கொடுத்தார் ஒளவையார்; இவ்வாறு கூறு

கின்றவர்களும் இருக்கிருர்கள்.

பாரிமகளிர் திருமணத்திற்குத் துணைபுரிந்தவர்

கபிலரா ஒளவையாா இவர்கள் ஒவ்வொருவரும், அம் மகளிர் இருவர் திருமணத்திற்கும் துணைபுரிந்தார் களா ? அல்லது, கபிலர், ஒருத்தி திருமணத்திற்கும், ஒளவையார் மற்ருெருத்தி திருமணத்திற்குமாகத் தனித் தனியே துணே புரிந்தார்களா? அம் மகளிர் இருவரும் ஒருவரையே மணந்துகொண்டனரா ? அல்லது வேறுவேறு அரசர்களே ம்ணந்துகொண்டார்களா ? இவை போன்ற

ஐயங்களுக்குத் தெளிவான உண்மை காணமுடியவில்லை.

பாரிமகளிர்க்குத் திருமணம் செய்யக் கபிலர் முயன் முர் என்று தெளிவாகக் கூறுகிறது புறநானுாறு ; அதைப் போலவே, அம் மகளிரை மலையமான் வழிவந்த ஒருவனுக்கு மணம்செய்து கொடுத்தார் கபிலர் என்று தெளிவாகக் கூறுகிறது திருக்கோவலூரில் உள்ள பழைய கல்வெட்டு. பாரிமகளிர் திருமணத்தோடு கபிலரைத் தொடர்புபடுத் தும் இவ்விரு ஆதாரங்களேப் போல், அவர்கள் திரு மணத்தோடு ஒளவையாரைத் தொடர்புபடுத்த நல்ல ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆகவே, விச்சிக்கோன், இருங்கோவேள் ஆகிய இருவரிடத்தும் அம் மகளிரை அழைத்துச் சென்று பயனின்றி மீண்ட கபிலர், அம் மகளிரைப் பார்ப்பார்பால் அடைக்கலமாக விட்டுச் சென்று, மலையமானேக் கண்டு உடன்படுத்திப் பின்னர் அம்மகளிரைக் கொண்டுசென்று அவனுக்கு மணம்செய்து கொடுத்தார் என்று கொள்வதே பொருத்தும் ; அம் மகளி ரின் இம் மண முயற்சியில் கபிலர்க்குத் துணையாய் ஒளவை யாரும் இருந்தார் என்று வேண்டுமானல் கொள்ளலாம்.