பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பெண்பாற் புலவர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாருேக்கத்து நப்பசலையார் 91.

மலேயமான் திருமுடிக்காரி கடையெழு வள்ளல்களுள் ஒருவன் ; பெண்ணையாறு பாயும் மலாடு என்ற நாட்டை ஆண்டவன் ; திருக்கோவலூர் அவன் தலைநகர் ; முள்ளுர் என்ற அரணமைந்த மலைக்கு உரியவன் ; சிறந்த போர் வீரன் ; சேர சோழ பாண்டியர் மூவர்க்கும் படைத்துணை அளிக்குமளவு பேராற்றல் வாய்ந்தவன் ; இவன், தகடுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த அதிகமான் நெடுமா னஞ்சியால் ஒரு முறை தோற்கடிக்கப் பட்டான் ; உடனே, அவ் வசிகன் பகைவனை பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசன் துணையைப் பெற விரும்பினுன் , அதற்காக அவன் பகைவனும், கொல்லிமலைக்குத் தலைவனுமாகிய ஒரி என்பானேக் கொன்று அக் கொல்லிமலையைச் சேரனுக்கு அளித்தான்; உடனே அச் சோன் அகியமான் தகடூர்மீது போர் தொடுத்து அழித்து அவனேக் கொன்ருன் ; மலேய மான் தன் அரசுரிமையை மீண்டும் பெற்ருன்.

மலையமான் சோழிய ஏனகி திருக்கண்ணன், மலேய மான் மரபிலே வந்தவன் ; சோழர் படைத்தலைவன். மலையமான் திருமுடிக்காரியின் மகன் இவன் என்று கூறு வர் சிலர் ; ஆனல் அதை உறுதிசெய்யும் தெளிவான சான்றுகள் கிடைத்தில. சோழர்குலச் சிற்றரசன் ஒரு வன் தன் தாயத்தார்க்கு அஞ்சி இவனிடம் அரண் புகுக் தான். அவனேத் தன் முள்ளூர் மலையில் வைத்துக் காத்த தோடு, அவன் பகைவரையும் வென்று அவனேச் சோழர் அரியணையில் ஏற்றினன்.

நப்பசலையார் பாராட்டிய அரசர்களின் வரலாறுகள் இவை ; இனி, இவர்களைப் பாராட்டிய அவர் பாடல்களின்

சிறப்புக்களைச் சிறிது நோக்குவோம்.

கிள்ளிவளவன் ஈதற்சிறப்பு, வெற்றிச் சிறப்பு, செங் கோற் சிறப்பு ஆகியவற்றைப் புகழவந்த கப்பசலையார், ‘அரசே கின்பால் வரும் புலவர்களுக்கும், இரவலர்களுக் கும் பொருள்களே வாரிவாரி வழங்குகின்ருய் என்று கூறு கின்ருர்கள் ; என்ருலும் அஃது உன் புகழாகாது.