பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச. வடநெடுந்தத்தனுர்

இவர், வடகாட்டினின்றும் தமிழ்நாட்டிற் குடிபுகுந்து வாழ்ந்த பழங்குடிகள் ஒன்றிற் முேன்றியவர்; தத்தனர் என்ற இயற்பெயருடையவர் ; இவர் புலமைாலம் அறிந்த அக்கால மக்கள், இவரை நெடுந்தத்தனர் என அழைத்துப் பாராட்டினர் ; இவர் பெயர், வடமகெடுத்தனர் என்றும், வடமநெடுந்தச்சனுர் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. இவர், நாலைகிழவன் நாகன் என்பானைப் பாாட்டிப் பாடி யுள்ளார்.

பாண்டிகாட்டில், அருப்புக்கோட்டையை அடுத்துள்ள நாலூர் என்பதே காலை என மரீஇ வழங்கியுளது ; அவ் ஆர்க்கு உரிமைபூண்டு வாழ்ந்தமையால் நாகன், நாலே கிழவன் நாகன் என அழைக்கப்பெற்றுளான் ; நாகன், பாண்டியர் படைத்தலைவருள் சிறந்தவன் ; பாண்டி வேந்தர்க்குப் படைத்துணே வேண்டிய காலத்தே அஃது அளித்துத் துணே புரிதலோடு, அப்பாண்டிநாட்டு அரசியல் நன்கு நடைபெறுதற்காம் நல்லறிவும் நல்கும் நற்பண்புடை யவன் ; கெடாத புகழ் உடையவன்; போர்க்களத்தே பகைவர் பலரைக் கொன்று, பருத்துகளின் பசி போக்கும் பேராண்மையாளன் ; இவன் துணை பெற்று, பாண்டி நாடாண்ட அரசன், மண்டல தந்த பாண்டியன் என அழைக்கப்படுதலால், அப்பாண்டியன், கிலந்தரு திருவிம்

பாண்டியனவன் எனக் கொள்வாரும் உளர்.

நாலைகிழவன் நாகனப் பாராட்டிய நல்லிசைப் புலவ. ாாய நெடுந்தத்தனர், உலகில், உயர்ந்த கொடையாளர் ஒரு வரும் இலராக எல்லோரும் மாய்ந்தாராக, பாணர், பொருநர், கூத்தர் முதலாம் இரவலர் தமக்குப் பொருள் அளித்துப் பேணுவாரை இழந்து வருந்திய காலத்தே, இவர்தம் வறுமைபோக வழங்கவல்லோன் யாவன் என வேண்டி கின்றார்க்கு, அவ்வாறு வழங்கவல்ல வள்ளியோன், சாலைகிழவன் நாகனவன் எனப் பலர் கூறினர் என்ற