பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உஅ. வான்மீகியார்

வடமொழி இராமாயணம் எழுதிய வான்மீகியார் வேறு இவர் வேறு; வடமொழி வான்மீகியார்பால், இவ ருக்கோ, அல்லது இவர் தங்தையார்க்கோ பேரீடுபாடு உடை மையால், இவர்க்கு இப்பெயர் இடப்பட்டது போலும். வடமொழிவல்ல முனிவர் பெயர்களைப் பண்டைத் தமி ழாசிரியர் மேற்கொண்டனர் என்று செந்தமிழ் நாட்டுப் புலவர் பெயர்களை கோக்கினர்க்குப் புலனும். வடமொழி வான்மீகியாரின் வழிவந்தவர் இவர் எனக் கூறுவாரும் உளர். "அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்’ என்ற தொல்காப்பியப் புறத்திணை இயல் சூத்திரத்தால், இவர் பெயர் வான்மீகனர் எனவும் வழங்கப்பட்டது என்பது தெரியவரும். இவர் பெயர், வான்மீகையார் எனவும் சில ஏடுகளில் காணப்படுகிறது. இதுவே உண்மைப் பாட மாயின், இது, மழையினும் சிறந்த வண்மையுடையார் எனப் பொருள்தத்து, செந்தமிழ்ச் சான்ருேர் ஒருவரது தமிழ் இயற் பெயராய், ஒரளவு ஒலி ஒற்றுமை உண்மை யால், வடமொழி வான்மீகியார் பெயரோடு தொடர்புபடுத் தப் பெற்றதாம் எனக் கோடல் பொருந்தும் ; இல்லறத் தினும் துறவறமே சாலச்சிறந்ததாம் என்ற பொருள் விளங்க வந்த புறப்பாட்டொன்று புறநானூற்றின் கண் இடம் பெற்றுளது.

மக்கள் மனம் இன்ப காட்டமுடையது ; அவ்வின் பத்தைத் தேடித் கிரிவது ; உலக மக்கள் ஓயாத உழைப் பதெல்லாம் அவ்வின் பத்தினைப் பெறற்பொருட்டே ; அதற்காகவே உலகில் வாழ்கின்றனர் ; அதற்காகவே பொருள்தேடிப் போர்புரிகின்றனர். ஆனால், எதை இன்பமென அவர் கருதுகின்றனரோ, அஃது உண்மை இன்பமாகாது; எங்கு இன்பத்தைப் பெறலாம் என எண்ணுகின்றனரோ, அங்கு அதைப்பெறல் இயலாது; இன்பம் கருதி எதைத் தேடிச் செல்கின்றனரோ, அவரை