பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பேயனர்

களத்திருந்து மீண்டார் சிலர், ஆங்கு எவ்விக்கு உண்டான இறுதி நிலையினை, ஊரில் உள்ளார்க்கு எடுத்துக் கூறினர்; அச் சொல் புலவர் காதிற்கும் எட்டிற்று; எவ்வியின் கொடைக்குணம், பொருள்வளம், படைப் பெருமை ஆகியன கண்டு கண்டு மகிழ்ந்த புலவர்க்கு அவர் கூறியன ஆற்ருெணுத் துயர் அளிப்ப ஆயின; அவர் கூறியன பொய்யாகிப் போர்க்களம் புகுந்த எவ்வி பெற்ற வெற்றி பணுய்ப் பெருமையுற மீள்வதை அவர் உள்ளம் அவா விற்று ; அவர் போவா, அவர் கூறியன பொய்யாகுமாக ! பொய்யாகுமாக எனப் பலகால் கூறி வேண்டவும் தாண் டிற்று ; வேண்டியும் பயனென் மாண்டான் மீண்டா னல்லன் ; இறந்த அவன் பீடும், பெருமையும், பெயரும் பொறித்த கல்லே நட்டு வழிபடலாயினர் அவன் சுற்றத் தார் ; அவன் மனேவி, அச் சிறு இடத்தை மெழுகிப், புல்லைப் பாப்பி, அதன் மீது பிண்டம் வைத்துப் படைக்கும் காட்சியைக் கண்டார் புலவர் ; கண் கலங்கிகின்றார். எவ்வி யின் மனநோக்கி இம் மாநிலத்துள்ளார் அனைவருமே அன்ருே வருவர்; வருவார் பலரோடும் இருந்து உண்டு இறும்பூது கொள்ளும் எவ்விக்கா இச் சிறு பிண்டம் ! என எண்ணி எண்ணி வருந்தினர். அவ்வாறு அவர் வருந்திய வருத்தம் இரு பாக்களாக உருக்கொண்டது.

எவ்வி இறந்தான்் என்ற செய்தி பொய்யாகுமாக என வேண்டிய புலவர், ஊரார் பலரும் ஒன்று நிகழ்ந்து விட்டதாகக் கூறினாாகவும், இறுதியில் அது நிகழாது போனதாக ஒரு கிகழ்ச்சி கம் காலத்தே நிகழ்ந்ததை எடுத்துக்கூறி, அதுபோல் இவர் கூறுவனவும் பொய்யாகுக என்று கூறியுள்ளார். . -

வள்ளலும் வீரனுமாக அகுதை என்பானுெருவன் இருந்தான்்; அவன் பகைவர் எறிந்த ஆழிப் படையால் அழிந்தான்் என்று பலர் கூறினர் ; ஆனால் இறுதியில், அவன் அப் படையால் அழிந்திலன் என்பது உறுதி யாயிற்று ; இந் நிகழ்ச்சிய்ை எடுத்துக் கூறி, அகுதை ஆழியால் இறந்தான்் என்ற சொல் பொய்யானதைப்