பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. பேயனார்

பேயனார் என்னும் பெயருடைராய இப்புலவர், முல்லை வளங்களை வனப்புறப் பாடுதலில் வல்லவராவர்; ஐங்குறு நூற்றின் ஐந்தாம் நூறாகிய முல்லைத் திணையைப் பாடியவர் இவரே; குறுந்தொகைக்கண் வந்துள்ள மூன்று செய்யுளும், நெடுந் தொகைக்கண் காணப்படும் செய்யுளும் அம்முல்லைத் திணைப்பொருள் பற்றியே பாடப் பெற்றுள்ளன.

நாடுகாவல், நன்பொருள் ஈட்டல் முதலாயின கருதித் தலைமகன் பிரிந்து போதலும், பிரிந்து சென்றான் செல்லுங் கால் கூறிய உரையினைத் தேறி, தலைமகன் ஆற்றியிருத் தலும், வினை முடித்து வருவான் வழியின் இன்பங்கண்டு வருந்திக் கூறுவனவும் முல்லைத் திணைக்குரியவாம். இவற் றின் இயல்புகளை யெல்லாம் இனிதெடுத்துப் பாடியுள்ளார் புலவர், அவர் காட்டும் முல்லை நிலக்காட்சிகள் - பலவாம்; அவை அனைத்தும் அறிந்து மகிழ்தல் எளிதில் ஆகாது ; அவற்றுள் அங்கொன்றும்; இங்கொன்றுமாகக் கண்டு களித்துச் செல்வோமாக.

பொருள் குறித்துப்போகும் தலைவன், கார்காலத் தொடக் கத்தே வருதல் உண்மை ; ஆகவே கவலாது இருக்க எனக் கூறிச் சென்றான்; அவன் உரையினைத் தேறி, அவன் மனைவி -யும் ஆற்றியிருந்தாள். அவன் கூறிய பருவமும் வந்து விட் து; ஆயினும் அவன் வந்திவன்; அதனால் அவள் வருத்தம் மிகுந்தது; வருந்தியிருப்பாள் முன்வந்து நின்றான் பாணன்; அவள் துயர் போகுமாறு, சில உறுதிகளைக் கூறத் தொடக் கினான்; அவன் பால், "பாண! சென்ற பின் தலைவர், என்னை மறந்து விட்டார்; என்பால் அவருக்கு அன்பும் இல்லை; ஆகவே, அவர் என் பொருட்டு இவண்வாரார்; அதற்காகவும் யான் வருந்துகின்றேனல்லேன்; தாம் கூறிய சொல் பொய்த்துப் போதலைக் கண்டும் அவர் நாணாமை கண்டே. யான் பெரிதும் வருந்துகின்றேன்" என்று கூறித் தன் துயரினும், தலைவன் சொற் பிழைத்தலால் - உண்டாம்