பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேயனுர் 7

துயரே பெரிதாம் எனக்கருதும் பெருந்தகையாள் ஒருத் தியைப் பாடியுள்ளார் புலவர்: -

'கைவல் சீறியாழ்ப் பாண நுமரே

செய்த பருவம் வந்து கின்றதுவே, எம்மின் உணராாாயினும், தம்வயின் பொய்படு கிளவி கானலும்

எய்யாாாகுதல் கோகோ யானே.” (ஐங்: சனஉ}

கார்ப்பருவம் வந்துற்றதாகவும் காதலர் வந்திலரே எனக் கலங்கும் தலைவியின் நிலையினைக் கண்டாள் தோழி. தலைவி தன் துயர் கருதி அழுகின்ருளல்லள்; தலைவன் சொல் பிழைபட்டமை குறித்தே பெரிதும் அழுகின்ருள் என் பதை உணர்வாள் அவள்; ஆகவே, தலைவியின் துயர்போக்க விரும்பிய அவள் தலைவன் பிழைபட்டிலன் என்பதைப் பொய்யாகவாவது அவள் உளங்கொள்ளுமாறு உணர்த்தத் துணிந்தாள்; அவள்பால் சென்ருள். தோழி! பொருள் தேடிப் போயுள்ள நின் தலைவர் கின்பால்பேரன்புடையாாவர் அவர் கின் எழில் கெடக் கண்டு விற்பாால்லர்; அவர், தாம் கூறிய சொற் பிழையாது வந்து சேர்தல் உறுதி; கொன்றை மாலைபோல் மலர்ந்து ள காட்சியைக் கண்டு மருண்ட கின் உள்ளம், இதைக்கார்காலம் எனப் பிறழக் கொண்டுவிட்டது; உண்மையில் இது கார்காலமன்று; கார்காலம் இன்னமும் தொடங்கிற்றில்லை; கொன்றை மலர்ந்தத கார்காலம் வந்து விட்டமையால் அன்று; கார்காலம் தொடங்குவதற்கு முன்னரே, அறிவில்லாத மேகம் மழைபெய்து விட்டது; காலமல்லாக் காலத்தே பெய்த இம்மழையைக் கார்காலத்து மழையெனப் பிறழக் கொண்ட கொன்றையும் மலர்ந்து விட்டது; இதுவே உண்மை; ஆகவே, இதைக் கார்காலம் எனப் பிறழக்கொண்டு புலம்புவது ஒழிக, தலைவர் அக்கா லத்தே கில்லாது வந்து அன்புசெய்வர்” என்று கூறித் தேற்றினுள்; தலைவன் வரும் காலமே, கார்காலம்; அவன் வருதற்கு முன்வரும் அக்காலம், உண்மைக் கார்காலமன்று. என உரைக்கும் உறுதியுள்ளம் உடையாளாய தோழியை, யும் பாடியுள்ளார். புலவர் : - -