பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பேயனர்

எதில பெய்ம்மழை காரென மயங்கிய - பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி எவன் இனி மடங்தை நின் கவிழ்வே நின்வயின் தகை எழில் வாட்டு சல்லர்: முகை அவிழ்புறவின் நாடிறந்தோரே..” (ஐங்: சசுஉ) தனித்துறையும் தலைவியின் துயர் கிலே கண்ட பாணன், அவள் துயர் போக்க எண்ணினன்; உடனே, தலைவன் தங் கும் பாசறை நோக்கிச் சென்ருன்; ஆங்கு அவனேக் கண்டு, அவள் துயரெலாம் எடுத்துக் கூறினன்; அதைக் கேட்டும், வந்தவினே முடியப்பெருமையால், தன்னுார் செல்ல எண்ணினனல்லன்; தலைவன் செயல் பாணன் உளத்தே சினம் எழச் செய்தது; மனேவி, மனத்தியர் கொண்டு மனையின்கண் மடிந்திருப்பவும், விரைந்து மீள எண்ணுது வினேயே கருதியிருக்கும் இவன் பண்புடையா னல்லன் எனத் துணிந்தான்் ; உடனே தலைவனே நோக்கி, * தலைவ! வின்டால் பாடிப்பிழைக்கும் பாணனும் அல்லேன் யான் ; எனக்குப் பொருள் அளித்துப் புரக்கும் தலைவனும் அல்லன் நீ ' என வெறுத்துக்கூறி வெளியேறிஞன்; பாடிப் பிழைப்பதைத் தன் தொழில் என எண்ணுது, கனக்குப் பொருள் அளித்துப் புரக்கும் தலைவன், பண் புடையணுதலும் வேண்டும் என விரும்பும் பாணனேயும் பாடியுள்ளார் புலவர் :

நினக்குமாம் பாணரும் அல்லேம் எமக்கு நீயும் குருசிலை அல்லை மாதோ ; நின்வெங் காதவி தன்மனைப் புலம்பி ஈரிதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டும் அருளா தோயே.” (ஐங்: சஅ0) பாணன் வழியாய்த் தலைவியின் துயர்நிலையினே அறிந்த தலைவன், வினையை விரைவில் முடித்துக்கொண் டான் ; வீடுகோக்கிச் செல்ல எண்ணிய அவன் உள்ளம் மிகமிக விரைந்தது; அவன் தேரிற்பூண்ட குதிரைகள் உள்ளம்போல் உற்றுழி உதவும் உானுடையன; தேர்ப் பாகனும் நெறியறிந்து ஒட்டும் நல்லறிவுடையான்; ஆகவே,