பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பேயார்

பேயார் எனும் இப்பெயர் இவர்க்கு வருதற்காம் காரணம் விளங்கவில்லை. கறைப்பல் பெரு மோட்டுக் காடு கிழவோள்,” எனும் வெண்பாவை மேற்கோள் காட்டி, "இது பூதத் தாழ்வாரும், காரைக்காற் பேயாரும் பாடியது,” எனக் கூறும் யாப்பருங்கல விருத்தியுரையினை எடுத்துக் காட்டி, "அவரும், இவரும் ஒருவரோ, வேருே, யாதும் புலப்படவில்லை,” என்று எழுதுவர் சில ஆசிரியப் பெருமக்கள் ; யாப்பருங்கல உரையால், பேயார் எனும் பெயருடைப் புலவர் பிற்காலத்தும் வாழ்ந்தார் எனக் கொள்ளலாமேயன்றி, அவரை, இவரோடு ஒற்றுமை காணல் எவ்வாற்ருனும் பொருந்தாது. இவர் பாடிய பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற்றுளது.

காடழித்து நாடாக்கும் கானவர், அக் காட்டு மரங் களே அழித்து எரித்தலின் எழுந்த புகை, அம் மரங்க எளிடையே அகிலும் சேர்ந்துள்ளமையான், மணம் கிறைந்த தாகி எழுந்து, பரந்துசென்று, அக் காட்டை அடுத்துள்ள அக் கானவர்தம் சிற்றுார்மீது படியும் எனக் குறிஞ்சிகிலப் பண்பினைப் படம் பிடித்துக் காட்டும் புலவர், அவ்வாறு எழுந்த புகை வெண்ணிறம் பெற்றுள்ளமையான், நீர் அற்ற வெண்மேகம்போல் தோன்றும் என அழகிய உவமையினையும் அமைத்துப் பாடியுள்ளார்:

"ஈறை அகில் வயங்கிய நளிபுன நறும்புகை

உறை அறு மையின் போகிச் சாால் குறவர் பாக்கத்து இழிகரும் நாடு.” (குறுங் டங்க)