பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. பேராலவாயர்

மதுரையில், சொக்கப்பெருமான் எழுந்தருளியிருக் கும் திருக்கோயிலுக்கு ஆலவாய் என்பது பெயர்; அதனல், ஆங்குக் கோயில்கொண்டிருக்கும் பெருமானுக்கு ஆலவாயர் என்பது பெயாம். சிவபெருமான், க்ரே ரோடு வாதாடவேண்டி, ஒரு புலவர் உருத்தாங்கி வந்த பொழுது தும் பெயர் யாது என்றார்க்கு எம்பெயர் போல வாயர் என்று கூறியதாகத் திருவிளையாடல் கூறும். அவ் விறைவனுக்குரிய இப் பெயரே, நம் புலவர்க்கு இயற் பெயராயிற்று. இவர், பிற ஊர்களிற் பிறந்து, மதுரை போந்து வாழ்ந்தாரைப் போலல்லாமல், மதுரையிலேயே பிறந்த வாழ்ந்தவர் ; ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் காலத்தே வாழ்ந்தவர்; அவனுக்குரிய வையை யாறு, கொற்கைத்துறை, மதுரைத் தல்ைநகர் ஆகியவற்றைப் பாராட்டியுள்ளார்; அவன் இறந்தனளுகத் தீப் புகுந்த அவன் மனேவியார் பெருங்கோப்பெண்டு தீப் பாய்தல் கண்டு வருந்தியுள்ளார். -

வையை, மனம் நானும் மலர்களால் மாண்புறும் மலர்ச் சோலைகளைத் தன் இருபாலும் கொண்டது ; பெரு கீர் உடையது என்றும், கொற்கைத்துறை, மீன் கொணர் எண்ணிக் கடல்மேல் சென்ற பரதவர், அம் மீன்களோடு கொண்ட முத்துச் சிப்பிகளைக் கள்ளிற்கு விற்கும் வளமை யால் கிறைந்த புகழ் உடையது என்றும், செழியன், வெற்றிதரும் வேற்படையாலும், பெரிய யானைப்படை யாலும், நெடிய தேர்ப்படையாலும் புகழுடையோனவன் என்.உம், கூடல் எனப் பெயருடைய மதுரை மாநகர், மலே போல் உயர்ந்து தோன்றும் மாட வரிசைகளையுடையது என்றும் பாராட்டியுள்ளமை காண்க.

'நெருகையும் கமழ்பொழில் துஞ்சி, இன்றும்

பெருநீர் வையை அவளொடு ஆடி.'