பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. மதுரைக் கண்ணனும்

கண்ணனர் என்ற பெயரைப் புலவர்கள் தம் இயற். பெயராகப் பயில வழங்கினர்; கண்ணனர் என்ற பெய ருடையார் பலராதலின், இவர் மதுரைக் கண்ணனர் எனப் பெயர் பெற்ருர்,

ஒரு தலைவன் பொருள் கருதிப் பிரிந்து பலநாள் கழித்து வீடு திரும்பினுன் ; அவன் பிரிந்தமையால் வருந்திய அவன் மனைவி, அன்று இரவு அவளுேடு மகிழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள் ; அன்றைய இரவு அவளுக்குப் பேரின்பம் தரும் இரவாய்த் தோன்றிற்று; அதனுல் அவ் விரவு நீண்டு தோன்ற விரும்பிற்று அவள் உள்ளம் ; அவ்வாறு அவள் உள்ளம் எண்ணிக்கொண்டிருக்கும் போதே, எங்கிருந்தோ வந்தது சேவல் ஒன்றின் குரல் , பொழுது விடிந்துவிட்டமை யறிந்து வெளியே வந்தாள் ; தன் வீட்டுக் கூரை மீது அக் கோழிச்சேவல் நின்று கூவுவ தைக் கண்டாள் ; அதன் பருத்துச் சிவந்து தோன்றிய கொண்டை, கொத்துக் கொக்காக மலரும் செங்காந்தள் மலர்போல் தோன்றி அழகு தருவதாயினும், அதன் செயல் துயர் தந்ததை எண்ணினுள் தலைவனுேடு நெடிது நோம் துயில விரும்பிய வேட்கை உடையளாதலின், தான்ே புலர்ந்த பொழுது, அச் சேவல் கூவியதால் புலர்ந்த தாகக் கொண்டாள் ; உடனே அச் சேவல்மீது அவளுக்கு. மாருச்சினம் பிறந்தது; “என் இனிய துயில் கெடுத்த ஏ சேவலே கின்னே உயிரோடு இனி விடுவதில்லை; இரவில் என் வீடு வந்து இல்லுறை எலிகளைத் தேடித் திரியும் காட்டுப் பூனைக்கு நீ விரும்பிய உணவாவாய்;. இன்று அப்பூனே வாட்டும ; சின்னேப் பற்றி அதன்பால் ஒப்படைத்து விடுகின்றேன்; அதனுல் கொல்லப்பெற்ற, அதற்கு இனிய உணவாகித் துயர் உறுவாயாக!' என வன்சொல் கூறிகின்ருள்.

தாம் அரிகின்பெற்ற நகரும் இன்பத்திற்கு இடை ஆறு உண்டாயக்கால், அதனுல் உள்ளம் உடைந்து சினம்