பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. மாதிரத்தனுர்

மாதிரம் எனும் சொல், திசைகள் எனும் பொருள் உடையது ; இவர்க்கு இப்பெயர் வழங்குதற்காம் காரணம் இஃது எனப் புலப்படவில்லை ; இவர் பெயர், மாதீரத்தன் என்றும், மாதீர்த்தன் என்றும் ஏடுகளில் காணப்ப கின்றன. .

'ஐய எம் ஊர்க்கு அணித்தேயுளது, ஊரார் நீர் உண்ணும் பொய்கை ; அப்பொய்கை அடுத்து ஒடுகிறது ஒரு சிறிய காட்டாறு; அக்காட்டாற்றினை அடுத்துளது ஒரு பொழில் : அப்பொழிற்கண் ஆற்றிலும், பொய்கை யிலும் மீன் தேடியுண்னும் பறவைகள் ஒழிய, பிறர் எவரும் அணுகார் ; யாங்கள் எம் கூந்தலுக்கு இட்டுப் பிசைய உதவும் எருமண் கொணர்வான் வேண்டி, ஆங்கு வருவேம் ; எம்மோடு எந்தலைவியும் வருவள் ’ என்று கூறி, ஊர்க்கு அணித்தே உள்ள பொய்கையை யடுத்துளது ஆகவே, பொழிற்கண் வருதல் எமக்கு எளிது என்றும், ஆங்குள்ள அப்பொழில், பறவையன்றிப் பிறர் தழையாத் தனிமையுடையது. ஆகவே, அப்பொழிற்கண் தலைவியைத் தனித்துக் காணலும் இயலும் என்றும், ஆங்குத் தலைவி யொடு வரும் யாங்கள், மண்கொணரும் நோக்குடையேம் ஆதலின், யாங்கள் ஆற்றங்கரையில் சிற்பதன்றி, பொழி லிடையே புகேம் ; ஆகவே, யாங்கள் வருவதால் நம் கூட் டத்திற்கு ஊறு இன்றாம் என்றும் கூறி, ஆகவே ஐய! தலைவியைக் காணவிரும்பும் நீ ஆண்டு வருக” எனக் தோழி பகற்குறியிடம் நேரும் துறையமையப் பாடிய புலவர் பாட்டொன்று குறுந்தொகைக்கண் இடம் பெற் „ff0| GT egū, -

இச்செய்யுற்சுண் ஊரும், ஊரைச்சார்ந்த ஊருணியும், அவ்வூருணியைச் சார்ந்து ஒடும் ஆறும், அவ்விரு நீர்நிலை கட்கும் இடையே அழகிய் ஒரு சோலையும் அமைந்து அழகுதா விளங்கிய தமிழகத்திச் சிற்றார்க் காட்சிகளே