பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 61.

பின்ளுேக்காப் பேராண்மை உடையவன் ; இறந்து துறக் கம் எய்திய முன்னேர்க்காக, ஆண்டுதோறும் விழா வெடுக் கும் வழக்கமுடையவன்; அவ் விழாக் காலத்தே வருவார்

எவர்க்கும் சோறு அளித்துப் புரக்கும் பேருள்ளம் உடை. யவன் : அச் சோறு உண்ணும் எண்ணத்தால், மக்களே

அல்லாமல் கூளிகளும் அவண்வந்து குவியும் என்றும்

கூறுகிருர். உதியன் பெருஞ்சோறு குறித்துப் புலவர் மாமூலனர் கூறுவனவே உண்மையாம் ; வரலாற்று நெறி யொடு பட்டதும் அதுவே என்பதைப் பிற புலவர் பாக் களும் உறுதி செய்கின்றன.

'நாடுகண் அகற்றிய உதியஞ் சோற்

பாடிச் சென்ற பரிசிலர் போல ,像 உவ வினி வாழி.” (அகம் : சுடு)

'மறப்படைக் குதிரை மாரு மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ் சேரல் - பெருஞ்சோறு கொடுத்த ஞான்றை இரும்பல் கூளிச் சுற்றம் குழிஇ இருந்தாங்கு. (அகம்: உங்ங்)

மாமூலனர், சேரலாதன் எனும் பெயருடையாகுெரு சோ அரசன், கரிகால் வளவனெடு, வெண்ணி எனும் இடத்தே நடத்திய போரில் புறப்புண் பெற்ருன் ; அது கண்டு உளம் வெட்கி உயிர்விடத் துணிந்து வடக்கிருங் தான்் ; இறந்து போகின்ருன் என்பதனுல் இன்னுமையும், புறப்புண் நாணி உயிர் விடுகின்ருன் என்பதனுல் இனிமை யும் உடைய அச் செய்தி கேட்ட, அவன்பால் அன்புடைய ஆன்ருேர் பலரும் அவைேடு வடக்கிருந்து உயிர்விட்டுத் துறக்கம் புக்கனர் என்ற செய்தியை ஒரிடத்தே கூறியுள் ளார். சேரர், சோழர் ஆகிய இரு குலத்தார் வரலாறு களையும் ஒருங்கு வைத்து ஊன்றி நோக்குவார்க்குக் கரிகாலளுேடு போரிட்டுப் புறப்புண் பெற்று உயிர்நீத்த சேரலாதன், பெருஞ் சோற்றுதியன் சேரலாதனே என்பது நன்கு புலம்ை.