பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனுர் 63

பேரெண்ணும் சிறிதாம் எனுமாறு மிக்கதாம் என்றெல் லாம் கூறிப் பாராட்டியுள்ளார் :

சால் பெருந்தான்ைச் சேரலாதன்

மால்கடல் ஒட்டிக் கடம்பறுத்து இயற்றிய :பண்ணமை முரசு ?

'வலம்படு மு.ாசின் சேரலாதன்

முக்கீ ரோட்டிக் கடம்பறுத்து இமயத்து முன்னேர் மருள வணங்குவில் பொறித்து நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னர் பணிதிறை தந்த பாசொல் நன்கலம் பொன்செய் பாவை வயிாமொடு ஆம்பல் ஒன்றுவாய் சிறையக் குவைஇ அன்றவண் நிலக் தினத் துறந்த நிதியம். (அகம்: டசள, கஉள)

குட்டுவன் என்பான் ஒரு சேர அரசன்; அவன் ஆட்சிக் கீழ்வந்த சிறப்பால், ஒடுவங் காட்டிற்கு அப்பாற் பட்ட குடநாடு, பசியறியாப் பெருவளம் உடையதாயிற்று; அந் நாட்டு எருமை, தாமரையை மேய்த்து, மிகுதியாக மேய்ந்துவிட்டமையால் அதை வெறுத்து பலாவின் கிழலில் தங்குதலை விரும்பும் ; அக் குட்டுவனுக்குரிய அரண் மதிலை முற்றவும் அழித்ததோடு, அற்றைப் பக்லே அவன் ஊரையும் தீயிட்டு அழித்தான்் ஒரு சோழ அரசன் என்ற வரலாறுகளையும் குறித்துச் சென்றுளார் புலவர்;

ஒடுங்காட் கிம்பர்

விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப் பசியென அறியாப் பணைபயில் இருக்கைத் தடமருப் பெருமை தாமரை முனையின் முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும் குடநாடு.” (அகம்: க.க)

' குட்டுவன்

அகப்பா அழிய நாறிச் செம்பியன் பகல்தி வேட்ட ஞாட்பு.' (ாற் கச)