பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 65

அணை புரிந்ததோடு அமைதியுற்ருரல்லர்; அவர் காலத்தும், அக்காலத்திற்கு முன்னும்,தமிழகத்தும், பிறநாட்டகத்தும் வாழ்ந்திருந்த சிற்றரசர் பலருடைய வரலாறுகளையும் விளக்கியுள்ளார்.

இன்று தர்மபுரி என வழங்கும் தகடூரை ஆண்டிருக் தான்் அதியமான் நெடுமானஞ்சி என்பாகுெரு குறுகிலத் தலைவன் ; ஒளவைக்கு அரிய நெல்லிக்கனி தந்த அருள் உள்ளம் உடையான் அவன்; அத்தகையான், கன் நாட்டை அடுத்துள்ள பகைவர் நாடுகளுட் புகுந்து அந்நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வருவதை வழக்கமாக உடையவன்; இவனைப் பாராட்ட முன்வந்த புலவர் மாமூலனுர், பிறை போல் வளைந்த வெண் கோடுகளையுடைய யானைப்படையும், சினம் மிக்கனவும், வலிமை உடையனவும், காற்றெனத் தாவிச் செல்வனவுமாய குதிரைப்படையும் உடையான் அஞ்சி; அவன் பகைவர் ஆனிரைகளைக் கவர்ந்துகொணர்ந்த மறைத்து வைப்பன் என ஆனிரை கவரும் அவன் ஆற்றலையே எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளார்: - ' பிறைமருள் வான்கோட்டு அண்ணல் யானைச் சினமிகு முன்பின் வாமான் அஞ்சி இனங்கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை.”

(அகம் : க.கடு) அதியன் எனும் குறுகில மன்னன் ஒருவனின் குண கலத்தைப், புலவர் மாமூலஞர் போற்றிப் புகழ்ந்துள்ளார் ; பாண்ரும், பொருநரும் பாடிப் பாவ வாழ்ந்திருந்தான்் அதியன்; அவனுக்கு ஒரு நண்பன், அள்ளன் எனும் பெயர்பூண்டு வாழ்ந்திருந்தான்்; அதியனுக்குப் படைத் துணைபோகும் பேராண்மையுடையவன் அவன்; அவன் துணையால் பெரு வெற்றிபெற்ற அதியன், அவன்பால் பேரன்புகொண்டு, பரிசிலாகத் தன் நாட்டின் ஒரு பகுதியையே அளித்துப் பெருமை செய்தான்் ; அத்தகை யான் இறந்தபின்னர், அவன் அவையிடைவாழ்ந்த, பாணர், பொருநர் முதலாம் இரவலரை ஆதரிப்பாரின்மையால், அவர்தம் கினைப்பறைபோலும் இசைக்கருவிகள் இயங்குதல்

تأسس. نسائي)