பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 67

மிதம் தோன்ற வாழ்ந்தமையால், அவளுல் அழிவுற்றேனு மாய எவ்வி என்பானைப் பாராட்டும் புலவர், அவன் பாணரைப் புரக்கும் பெருமைவிளங்கப் பாராட்டியுள்ளார்; எவ்வியைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த பாணர், அவன் இறந்தான்் என அறிந்து, அவன் இறந்துகிடக்கும் போர்க் களம் சென்று அவனேக் கண்டு கண்ணிர்விட்டுக் கலங்கி, அவனே இழந்தபின்னர், அவனைப் பாராட்டப் பயன்பெற்ற தம் கையாழ், அத்தொழிற்கு இனிப் பயன்படாமை அறிந்து, வணங்கி வாழ்த்தவேண்டிய அதை முறித்து ஆண்டே எறிந்து அகன்றனர் எனக்கூறி, அவரை அவன் புரந்த அருமையும், அவன்பால் அவர் கொண்டிருக்த அன்பும் ஒருங்கே புலப்படப் பாடினர் :

' வாய்வாள்

எவ்வி வீழ்ந்த செருவில், பாணர்

கைதொழு மரபின்முன் பரித்திடுஉப் பழிச்சிய

வள்ளுயிர் வணர் மருப்பு.” (அகம் : க.கடு)

சோழ வேந்தர்க்கு அடங்கிப் பணிபுரியும் சிற்றரசாய் வாழ்ந்தாருள் எழினி என்பானும் ஒருவன் ; ஒருகால் சோழவேந்தன் குழிகளை வெட்டி, அதில் விழும் யானை களைப் பிணித்துவரும் யானை வேட்டைக்குச் சென்றி ருந்தான்் ; அக்கால அவனுக்குத் துணையாகச் செல்ல வேண்டிய எழினி சென்ருனல்லன்; அதனுல் சினங் கொண்ட சோழன், தன் படைத்தலைவருள் சிறந்தோனும், கழார்த்துறைக்கு உரியோனுமாய மத்தியை அனுப்பி, அவனே ஒறுக்கப் பணித்தனன்; சோழன் ஏவச் சென்ற மத்தி, எழினியைப் போரில் வென்று, அவ்வெற்றிக்கு அறிகுறியாக அவன் பல்லைப் பறித்துவந்து வெண்மணி எனும் ஊரின் வாயிற் கதவிற் பதித்து வைத்தான்். எழினி, மத்தி இருவர்க்கிடையே சிலவிய உறவினை விளக்கும் இங்கிகழ்ச்சியைத் தம் பாட்டொன்றில் குறித்து, அக்காலப் பேரரசர் தம் ஆட்சிக்கீழ்ப் பணிபுரியும் படைத் தலைவர்பால் கொண்டுள்ள மதிப்பின் தன்மையினே விளக்கி புள்ளார் புலவர் மாமூலனுர் :