பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பேயனர்

' குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை

பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக் கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி நெடுஞ் சேணுட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல்லெறிந்து அழுத்திய வன்கட் கதவின் வெண்மணி வாயில் மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை. (அகம்: உகக).

சேரர் படைத்தலைவர்களுள் கட்டி என்பவனும் ஒருவன் ; பாணன் எனும் வடநாட்டு மற்போர் வல்லானே நண்பனுகக் கொண்டவன் ; ஒருகால், உறையூரிலிருந்து ஆட்சிபுரிந்த கித்தன் வெளியன் என்பாைெடு போர்புரிய எண்ணிப் பாணனையும் துணையாகக் கொண்டுவந்தான்். வந்தவன், தித்தன் நாளவைக்கண் ஒலிக்கும் கினையோசை கேட்டே அவன் பெருமையுணர்ந்து, அஞ்சி அகன்றுவிட் டான் ; இத்தகையான், தமிழகத்தின் எல்லேயிலே வாழ்ந்து, வடுகர் போலும் பிறமொழியாளர் தமிழகத்துட் புகாவாறு பேராணுய் விளங்கிவந்தான்்; வடுகநாட்டிற்கும், தமிழகத் திற்கும் இடைப்பட்ட இவன் நல்ல நாட்டைக் குறிப்பிட்டுப் பெருமைசெய்துள்ளார் புலவர் மாமூலனர் :

“ வடுகர் முனையது

பல்வேல் கட்டி கன்னட்டு உம்பர் மொழி பெயர் தேஎம்.” (குறுங் : க.க).

பகைத்துப் போரிட வந்தாரை வென்று ஒட்டும் வெற்றித்திருவுடையானும், அதற்கேற்ற வீரம் செறிந்த படைத்துணையுடையானுமாய கண்ணன் எழினி என்பா னேயும், அவனுக்குரிய தேன் வளம் மிக்க முதுகுன்றம் எனும் மலையையும் பாராட்டும் மாமூலனர், அம்மலை தமிழகத்திற்குச் சேய்மைக்கண் உளது என்பது படக் கூறியுள்ளார்.

' முன்னுவர் ஒட்டிய முரண்மிகு திருவின்

மறமிகு தான்ைக் கண்ணன் எழினி தேமுது குன்றம் இறந்தன ராயினும்.” (அகம் : க.க.எ).