பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 69

தமிழ் நாடாண்ட குறுகில மன்னர்களுள் திதியன் எனும் பெயருடையார் பல்ராவர்; அவருள் ஒரு திதியன், தன் நாளோலக்கக் காலத்தே, ஏழிச்ைத்துறையில் வல்ல சாய், யாழிசைத்துப் பாடிப் பரவும் பாணர், பெருமகிழ்ச்சி கொண்டு ஆரவாரிக்குமாறு அவர்க்கு அரிய அணிகலன் பல அளிக்கும் அருள்நெறி அறிந்தவனுவன் ; வள்ளலாய அவன், வாட்போர் வல்ல வீரனுமாவன் ; ஒருகால் அவன் தன்னே எதிர்த்த வேளிரொடு பெரும்போர் புரிந்து வெற்றிபெற்முன். இச் செய்தியும் மாமூலர் செய்யுட்டுண கொண்டே அறியப்படுவதாயிற்று :

“அருந்துறை முற்றிய கருங்கோட்டுச் சீறியாழ்ப்

பாணர் ஆர்ப்பப் பலகலம் உதவி, நாளவை இருந்த நனைமகிழ் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த

வாள்வாய் ?? (அகம்: உங்க)

வேள் மரபில் வந்தோருள், நன்னன் என்பான் நனி சிறந்தவளுவன் ; அவன் கொண்கான நாட்டகத்ததாய ஏழில்மலை, பாழி, பாரம் முதலாய ஊர்கட்கு உரிமையுடை யான் ; பாழி, பகைவரான் கைப்பற்றற்கரிய காவலை யுடையது ; வேளிர் பலரும், தம் அரும்பொருளே வைத்துக் காக்கும் அத்துணேச் சிறப்புடையது ; தன் தோட்டத்து குறுமாவின் காயொன்றைத் தின்ருள் என்பதற்காக, அவள் தந்தை அத் தப்பிற்குத் கண்டமாக எண்பத்தோர் யானை களும், அவள் கிறை பொன்னுலாய பாவையும் தர முன் வந்தும் ஏற்றுக்கோடாது, அவளேக கொன்ற அறக்கொடி யோனுயவன் இங்கன்னனே. இந் நன்னனுக்குரிய பாழியின் சிறப்பையும், நீதி வழங்குவதில் நடுநிலை பிறழாமை யுடையணுய அவன் தன்சீனப் பாடிவரும் பரிசிலர்தம் வறுமையைப் போக்க, பகைவர்தம் பேரரண்களே ஆற்றல் கொண்டு அழித்து ஆங்குத் தான்் பற்றிக்கொணர்ந்த பெரும்பொருளே வரையாது வழங்கும் வள்ளன்மைச் சிறப்பையும் எடுத்துக்கூறிப் பாராட்டியுள்ளார் புலவர்.