பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பேயனர்

தாம் பாடிய பாக்களில் குறிப்பிட்டுள்ளனர்; வடநாட்டு விகழ்ச்சிகளே விளங்க உணர்ந்தவராய மாமூலர், மோரியர் படையெடுப்பினை இாண்டிடத்தே எழுதிக் காட்டியுள்ளார். தமிழகத்தின் வடக்கெல்லையை ஒட்டிய நாட்டினாாய வடுக ைவழிகாட்டும் தாசிப் படையினராக் கொண்டுவந்த மோரியர், தம் தேர்ப்படை தடையின்றித் தென்னுட்டில் புகும்வண்ணம், வழியிடை யிருந்த மலைகளே வெட்டி வழி யமைத்தனர் என்றும், அவ்வாறு வந்த அம் மோரியர், மோகூர் மன்னனேப் பணியவைப்பான் வேண்டிப் பெரும் போர் புரிந்துகொண்டிருந்த கோசர்க்குத் துணைபுரிந்து அவர் துணையையும் பெற்றனர் என்றும் மாமூலனுர் கூறி புளளமை காண்க :

'வடுகர் முன்னுற மோரியர்

தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற வோங்கிய பணியிருங் குன்றத்து ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை.” 'கோசர்..................

தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின் பகைதலே வந்த மாகெழு தான்ே வம்ப மோரியர் புனேதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள்ளருவிய அறை.”

奪 (அகம் உஅக, உடுக) கோசர், மழவர்களைப் போன்றே தமிழரசர்கட்குத் தீராத் தொல்லை தந்து வந்தவர் வடுகளாவர்; இவரை வென்று அடக்க வீறுகொண்டெழுத்த வேந்தர் பலராவர்; அத்துணை ஆற்றல் வாய்ந்தவராய இவ்வடுகர், புல்லிக்குரிய வேங்கட மலைக்கும், கட்டி என்பானுக்குரிய நாட்டிற்கும் வடக்கின் கண் உள்ள நாட்டில் வாழ்பவர்; தமிழ்மொழிக்கு அய லான ஒரு மொழியை வழங்குபவர்; விற்போரில் வல்லவர் என்றெல்லாம் கூறி இவர் வரலாற்றின் ஒருபகுதியைவிளக்கி

கியுள்ளார் புலவர் மாமூலனுர்.