பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-78 பேயனர்

அடைந்து விட்டான்; ஆனல், உடனே உட்புகுதல் இய லாததாயிற்று; தாயும், தமரும் உறங்கும் வரை ஆங்கேயே காத்துக்கிடந்தான்்; பேயும் கண்ணுறங்கும் நள்ளிரவு வந்து ற் றதும், ஒருவாறு எல்லோரும் உறங்கிவிட்டனர் என்பதை உணர்ந்த அவன், இருந்த விடத்தை விட்டு எழுந்து ஒசைஎழாவாறு மெத்தென நடந்து சென்று, அம் மனேவாயிலிடத்து வலிய கதவினப் பையத்திறந்து உட் புகுந்தான்்; பின்னர் அவளைக் காணத் தான்் பட்ட தய ரெலாம் ஒழியும் வரை, அவளோடு அன்புரை வழங்கி அளவளாவி யிருந்து மீண்டான். களவுக் காலத்தே, காதலியைக் காணத்துடிக்கும் காதலன் செயலைக் கவினுறக் காட்டிய புலவர், அவன் அவள் மனேயகத்தே காத்துக்கிடப் பது, வள்ளியோர் கடைத்தலை, வந்து காத்துக்கிடக்கும் இாவலர் செயல் போலும் என உவமையும் கூறியுள்ளார்.

'இரும்பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று அருங்கடிக் காப்பின் அகனகர் ஒரு சிறை எழுதியன்ன திண்ணிலக் கதவம் கழுது வழங்கு அரை நாள் காவலர் மடிங்கெனத் திறந்து ப்ேபுணர்ந்து நம்மிற் சிறந்தோர் இம்மை உலகத்து இல் எனப் பன்னள் பொம்மல் ஒதி விேய காதல்.” (அகம்: க.க.க)

பண்டைத் தமிழ்மகன் ஒவ்வொருவனும் வீாணுய் விளங்கினன்; அவன், போரில் புண்பெறலைப் புகழ்பெறு செயலாப் போற்றினன்; போர்க்களம் புகுந்தான்்; புண் பெருது கழித்த நாளைத் தன் வாழ்நாளில் பயனின்றிக் கழிந்த நாள் எனக் கருதினன். 'விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் தன் காளை எடுத்து” எனக் கூறுவர் வள்ளுவரும் (எ.எசு). இதற்குக் காாணம், இம் மையில் போரில் புண்பெற்று இறந்திர்ரே, மறுமையில் மாருப் பேரின்ப நிலைபெறுவர் என அவர்கள் நம்பியதே யாம். அதனல், போரில் இறவாது, இயல்பாக நோயுற்று இறந்தார்_உடலையும், வாளுற்று விளியாமையால் வந்துற்ற அவர் பழிங்ேகுமாறு, அவர் உடலைத் கருப்பைப் புல் மீது