பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாமூலனர் 79.

கிடத்தி, நல்லமர் வீழ்ந்த நாணுடை மறவர் பெறும் கன்னிலே இவர்க்கும் வாய்க்குமாக’ எனக்கூறி வாளால் வெட்டிப் பின்னர்ப் புதைப்பர். இவ்வாறு வளர்ந்து வாழ்ந்து இறந்தார் உடலையே யன்றி, பிறந்தபோதே இறந்த குழவியின் உடலையும், உருவற்றுப் பிறந்த ஊன் தடியை யும் அவ்வாறே வெட்டிப்புதைப்பர்:

'நோய்ப்பால் விளிந்த யாக்கை தழிஇக்

காதல் மறந்து, அவர் துே மருங்கு அறு மார் அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம்புரி பசும்புல் பாப்பினர் கிடப்பி மறம் கந்தாக நல்லமர் வீழ்ந்த நீள்கழல் மறவர் செல்வழிச் செல்க என வாள் போழ்க்து அடக்கல்.’ 'குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்

ஆள் அன்று என்று வாளின் தப்பார்.

(புறம் கட, எச)

தமிழர் தம் தன்னேரில்லா இப்பண்புணர்ந்த புலவர் மாமூலனுர், நாடுகாவற் பணிகுறித்துப் போர் மேற்கொண்டு பிரிந்து சென்ற கலவன் ஒருவனேக் கூறுங்கால், கூற்று வன் கொள்ள வீணே இறவாது, தம் பொருளைப் பிறர்க்கு அளித்துப் புகழ் கிறைந்து போரிடை இறந்தாரே, பெருங் தவம் புரிந்தோராவர் என்பதை வற்புறுத்தி யுணர்த்தி விட்டு, தன் வெற்றிச் சிறப்பை விளக்கிக் காட்டப் பிரிங் தான்் எனக் கூறிப் பாராட்டியுள்ளமை காண்க:

  • கேற்ருேர் மன்ற தாமே, கடற்றம் -

கோளுற விளியார், பிறர்கொள விளிந்தோர் எனத்

தாள்வலம் படுப்பச் சேட்புலம் படர்ந்தோர்.’ (அகம்.சு.க)

உடனிருந்து அன்புசெய்ய வேண்டிய தலைவர், தன்னைப் பிரிந்து, காடு மலையும், காட்டாறும் இடையிட்ட சேய்நாட்டிற்குச் சென்று விட்டார் என வருந்திய தலை மகள், தன் தோழியை நோக்கி, ' தோழி! நம்மைத் தனித்துத் துயருறப் பிரிந்துசென்ற தலைவர் நம்மோடு