பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பேயனர்

உடனுறைந்த காலத்தில் அவர்க்கு இடையரு இன்பம் தங் தோமே யன்றிச் சிறிதும் துயர் தந்தோமில்லை ; இங்கனம், நன்றன்றித் திதொன்றும் செய்கறியேமாகவும், நாம்வருந்த அவர் பிரிந்தது எனே உலகத்தார், இம்மையில் நன்மை புரிந்தார்க்குத் தீமை வந்துறவதில்லை என்று கூறுகின் நனரே ; பண்டுதொட்டு வந்த அப் பழமொழி, இன்று, நம் மளவில் பொய்த்துவிட்டது போலும் ' எனக்கூறி வருந் தினுள் எனப்பாடி நல்லன புரிந்தார் அல்லன உறுதல் இல் என நம்பும் தம் உள்ளத்தையே காட்டியுள்ளார் புலவர் :

அம்ம வாழி தோழி இம்மை நன்றுசெய் மருங்கில் கிேல் என்னும் தொன்றுபடு பழமோழி இன்று பொய்த்தன்று கொல் f

பனிபடு பன்மலை இறந்தோர்க்கு முனிதரு பண்பு யாம்செய்தன் முேவிலமே.”(அகம்: க.க)

பொருள்கருதிப் பிரிந்து சென்று ளான் தலைவன் ; தலைவனைப் பிரிக்கறியாத் தலைவி, அப்பிரிவினைத் தாங்காது பெரிதும் வருங் கிள்ை; அதனல், அவள் உடல் நலனும் குன்றிற்று ; அவளும் அழகிழந்து தோன்றலாயினள் ; அவ்வூரில் வாழும் பெண்டிர் பிறரைப் பழி கூறுவதில் மகிழ்ச்சிகானும் மனமுடையவராவர்; பிறர்பால் பழியில்லை யாகவும், பொருந்தாதன சிலவற்றை ஏறிட்டுக் கூறியாவது இன்பம் காண்பது அவர் இயல்பு ; அத்தகையார், நலம் குறைந்த தோன்றும் இவளைப் பழிக்காதுவிடார்; இதை யெல்லாம் உணர்ந்த தோழி, விரைந்து வந்து சேருமாறு தலைவனுக்குத் துாதுவிடவும் எண்ணினுள் ; தோழியின் கருத்தை உணர்ந்தாள் தலைவி; தன் பால் பேரன்புடைய அவர், தன் துயர்நிலை அறியின், காம் மேற்கொண்ட வினையை முடியாது விடுத்தே வந்துசேர்வர் என்பதை உணர்வாள் ; அவர் அவ்வாறு வருதல் அறமுமன்று ; தம் ஆக்கமும் தேயும் ; ஆகவே அவர் வினே முடியாமுன்னர் மீண்டு வருதலே விரும்பினுளல்லள்; தோழிபால், "தோழி!

ஊர்ப்பெண்டிர் உரைப்பன உரைக்க என் நலன் கெடிலும்