பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-பேயனார்-39புலவர்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பேயனர்

" தோள்புலம்பு அகலத் துஞ்சி, சம்மொடு

நாள்பல நீடிய காந்துறை புணர்ச்சி நானுடை மையின் நீங்கிச் சேய்காட்டு அரும்பொருள் வலித்த நெஞ்சமோ டேகி நம்முயர்வு உள்ளினர் காதலர்.” (அகம் : அஎ) தாய்மனே வாழ்வே வேண்டின், தான்் விரும்பும் காதலனே மணத்தல் இயலாது ; தமர்புறத்தார்க்கு வரைவு நேர்தலும் செய்வர் என அறிந்த தலைவி, தமர் அறியா வண்ணம் தலைவனேடு கூடி அவனுார் சென்று விட்டாள். இதை அறிந்த அவள் தாய், தன் மகளே அவள் விரும்பும் அன்புடையானுக்கு மணம்செய்ததா மறுத்த தன் தவறு உணாாது, அன்புடையானுடன் சென்றுவிட்ட அவளைப் பலவாற்ருனும் பழித்துரைக்கும் இக்காலத்தாய்போலன்றி, * யான் அவள்பால் கொண்டுள்ள அன்பு உண்மையாய் அதன் பயன் தருவதாயின், அவள் தோழிமாரும், யானும் வருந்துமாறு எம்மைவிட்டுப் பிரிந்து, தன் மனதிற்கினிய துணைவனுடன் சென்ற என் மகள் செல்லும் வழி தம் ஊர் நோக்கி வரும் வறியரை வரவேற்றுப் பேணும் பெருமையுடைய நம் ஊரில் அவள் அறிந்த மக்களே உடைய தாகுக!” என்றே விரும்பினுள். கடமையறிந்த அத் தாயுள்ளத்தின் கனிவுதான்் என்னே ! ' எம்.வெங் காமம் இயைவ தாயின்,

வறுங்கை வம்பலர்த் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் அறிந்த மாக்கட்கு ஆகுக தில்ல : தோழிமாரும் யானும் புலம்ப

இன்துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக் குன்ற வேயில் திரண்ட என் மென்கோள் அஞ்ஞை சென்ற ஆறே. (அகம் : கடு) மாமூலனுர், அழகிய ല.ഖങ്ങഥക് ஆங்காங்கு அமைத் துப் பாடவல்லவராவர் என்பது அவர் பாக்களை நோக்கி

ஞர்க்கு இனித புலம்ை. அவர் காட்டும் உவமைகளுள் சில: