பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடு. மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவன் நாகன்தேவன், கடுவன் மள்ளன் என்பன நாகன் மகன் தேவன், கடுவன் மகன் மள்ளன் என்றே பொருள் படும் என்று சிலர் கூறுவர். அவ்வாறு கொண்டால், இவர் மதுரையில் தமிழ்க் கூத்தவல்ல நாகனரின் மகனு ராவர். இவர், மதுரையில் வாழ்ந்த மற்ருேர் தமிழ்க் கூத்தராகிய கடுவன் மள்ளன் என்பார்க்கு என்ன உற வினரோ அறியோம்; கடுவன் மள்ளன், நாகன்தேவன் இருவரும், மதுரைத் தமிழ்க் கூத்தனரின் மக்களாவர் என்று கூறுகின்ருர் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள்; ஆல்ை, அவ்வாறு கொள்வதற்கு எத்தகைய சான்றினையும் அவர் காட்டவில்லை. - - நிலத்து ஈரம் இல்லையாம்படி ஞாயிறு காய்கிறது. என்பதற்கு, ஞாயிறு, தன் கதிர்களாகிய கைகளினல், கிலத்து ஈரத்தைக் கவர்ந்துகொண்டது என்று கூறும் பொருள் நன்முக அமைந்துளது: - கதிர் கையாக வாங்கி, ஞாயிறு பைதறத் தெறுதலின் பயங்காந்து மாறி . . . விடுவாய்ப் பட்ட வியன்கண் மாநிலம். (அகம் : கசுச) காட்டில் பெருமழை பெய்ததனால், அக்காடு வெண் முல்லையும், செங்காந்தளும் மலர்ந்து மணம் வீசுவதைக், க்ண்டு, அம்மலர்களின் மணம் அளவிற்குமீறி வீசுகிறது. என்பதை அறிவிக்க, காடு மனவெறிகொண்டு மணக்கிறது என்று கூறுவது மகிழ்ச்சியூட்டுவதாக உளது: - "நறுவி முல்லையொடு தோன்றி தோன்ற - * . . . . வெறி என்றன்றே வீகமழ் காணம்.” (அகம் : சசுச)