பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உசு. கணக்காயன் தத்தன் தமிழ் எழுத்துக்களைக்கொண்ட தமிழரிச்சுவடிக்குத் தமிழ்க் கணக்கென்றும், தமிழ் நெடுங்கணக் கென்றும் பெயர். ஆயம் என்றசொல் கூட்டம் எனப் பொருள்படும்; இளஞ்சிறார் பலரை ஒன்று கூட்டி வைத்துக்கொண்டு, தமிழ் எழுத்துக்களைக் கற்றுத்தரும் ஆசிரியரைக் கணக்காயர் என அழைப்பது வழக்கம். கணக்காயன் எனவும், கணக்காயன் தத்தன் எனவும் அழைக்கப்பெறும் இவர், தமிழ் எழுத்துக்களைக் கற்பிக்கும் ஆசிரியத்தொழில் மேற் கொண்டு வாழ்ந்தமையால் இப்பெயர் பெற்றார் என்ப. ஆனல், கணக்கு என்பதற்குத் தமிழ் எழுத்துக்கள் என்ற பொருளும் உண்டு எனினும், அச்சொற்கு, அஃதொன்று மட்டுமே பொருளாகாது; வேறு பொருளும் உண்டு. தமிழ் நூல்களுள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், நாலடி, நான்மணி, நானாற்பது, நாலைந்திணை, முப்பால், கடுகம், கோவை, பழமொழி, மாமூலம், கைந்நிலை, காஞ்சி, ஏலாதி என்ற பதினெட்டு நூல்களையும் பதினெண்கீழ்க் கணக்கு என்றும் வழங்குவர் ஆகலின், கணக்கு என்பது நூல் எனப் பொருள்பட்டு, கணக்காயர் என்ற சொல், அநூல் உணர்த்தும் ஆசிரியர் எனப் பொருள்படும் ஆதலாலும், மணிமேகலையில் வரும் சமயக் கணக்கர் என்றசொல், சமய நூல்வல்ல ஆசிரியர் எனப் பொருள்படும் ஆதலாலும்,நிகண்டுகள், கணக்காயர் என்ற சொற்கு, ஒத்துரைப்போர், நூலுரைப்போர் எனப் பொருள் தருகின்றன் ஆதலாலும், பிங்கலத்தில், “ எழுத்தும் எண்ணும் கணக்கென்றாகும்’ என வருதலின், இலக்கியமேயன்றி, இலக்கணமும் கணக்கெனப்படும் ஆதலாலும், கணக்காயர், எழுத்தோதக் தற்பிக்கும் ஆசிரியர் அன்று ;தொல் கேள்வித்துறை போகிய நல்லாசிரியர் ஆவர் என்று கொள்க. கணக்காயன் தத்தனர், ' முத்துப்படு பரப்பின் கொற்கை முன்துறை” எனக் கொற்கைத் துறையின்