பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணக்காயன் தத்தன் 99 சிறப்பினேயும், கடல் உழந்துவாழும் பரதவர், விரைந்து செல்லும் மீன்படகில் சென்று, எறிந்த உயிர்களைத் தப் பாது கொல்லும் ஆற்றல்வாய்ந்த கூர்மை பொருங்கிய எறியுளி பொருத்தப்பெற்ற உலர்ந்த பெரிய மூங்கிற் கழியை, செல்லும் வழியில் எதிர்ப்பட்ட சுரு மீன்மீது எறியக்கண்ட, கரையில் தங்கியிருந்த அன்னப்பறவை களின் கூட்டம் அஞ்சி எழுந்து பறந்து செல்லும் என நெய்தல் கிலத்தார் வாழ்க்கையினையும் வகுத்துக் காட்டி புள்ளார்: - கொல்வினைப் பொலித்த சுடர்வாய் எறியுளி முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் தாங்கரும் நீர்ச்சுரத்து எறிந்து வாங்குவிசைச் கொடுந்திமில் பரதவர் கோட்டுமீன் எறிய நெடுங்கரை யிருந்த குறுங்கால் அன்னத்து வெண்தோடு இரியும் வீததை கானல்.” (குறுங் : உoச)