பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள. மதுரைக் கணக்காயனுர் சங்கம் வைத்து மொழி வளர்த்த புலவர் பெரு, மக்களுள், அத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராம் பெருமை கொண்ட நக்கீானுர்க்கு நல்லறிவு கொளுத்திய கல்லாசிரி யரும், அவரைப் பெற்றெடுத்த பெருமையுடையாரும் நம் மதுரைக் கணக்காயனரேயாவர்; கணக்காயன் இல்லாத ஊர் ' என்ற கழிபெரும் குறைபாட்டினைப் போக்கி மதுரைக்கு மாண்பு தந்தவர் நம் கணக்காயனர் ; மதுரைக் கணக்காயனர் ; கம்பால் கல்விகற்க விடப்பட்ட இளஞ்சிருர்க்குத் தமிழ் நெடுங்கணக்காம் எழுத்தினை அறி வித்தல் முதல், பதினெண் மேற்கணக்கு, பதினெண் கீழ்க் கணக்கு என வரிசை செய்யப்பெற்ற பெரு நூல்களே ஒதி அவரைப் பெரும் புலவராக்கும் வரை, ஆசிரியராம் தகுதிப் பாட்டினை நீங்காது கொண்ட நிறைந்த புகழுடையராவர். பாண்டியர் தலைநகரில் வாழ்ந்து, அவ்வரசர்களின் பண்புணர்ந்த கணக்காயனுர், டாண்டியர், காட்டானை அழித்து, ஆங்குள்ள ஆகிரைகளைக் கவர்ந்துவரும் கள்வர் களாகிய வீரர்கட்குத் தலைவர்; ஏவிய வினையினே இமைப் பினில் முடித்து கிற்கும் இளைய வீரர்களுக்குத் தலைவர்; வேளிரும், வேந்தருமாய்த் தம்மோடு பகைத்து கிற்பாரின் அரிய அரண்களை அழித்து, அவர்களைப் பலகாலும் வெற்றி கொள்ளும் ஆற்றலுடையவர் ; என்றும் குன்றுதல் இல்லாப் பெரும் புகழ் உடையவர் ” என்றும், - " அருப்புழை திறப்பின் - ஆகொள் மூதார்க் கள்வர் பெருமகன்; எவல் இளையர் தலைவன் ; மேவார் அருங்குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்துபடப் பல்செருக் கடந்த செல்லுறழ் தடக்கைக் கெடாஅால்லிசைத் தென்னன்.” - - - (அகம் : க.ச.உ) வேங்கட மலையில் பிறந்து வளர்ந்த, யானைகளைக்கொண்ட பெரும் படையினையும், அப்படைத் துணைகொண்டு