பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வணிகரிற் புலவர்கள் அரசர்களும் வாழும் தலைநகரங்களில் பொன்செய் கொல்லர் பலர்கூடி வாழலாயினர். இவ்வாறு வாணிபத்துறையிலும், அவ்வாணிபத்திற்கு உயிர்கொடுக்கும் தொழில் துறை யிலும் தமிழகம் தனிச் சிறப்புற்றுத் திகழ்ந்தது. அந்தக் காலத்தில், அவ்வணிகர்களுள்ளும், தொழி லறிந்தாருள்ளும் சிலர், தங்கள் தொழில்களுக்கிடையே, தமிழ் நூல் பயின்று பெரும் புலமையுற்று விளங்கினர். அவ்வாறு வாழ்ந்த புலவர்கள் சிலர் வரலாற்றினை உரைப் பதே இந்நூல். இந் நாலினுள், வணிகர்களாக வாழ்ந்த அறுவர் வரலாற்றை முதற்கண் உாைத்து, அவரைத் தொடர்ந்து, பொன்செய் கொல்லராய்ப் புலமையுற்ருர் இருவர் வரலாற்றினே விரித்துரைத்து, பிறகு முறையே கொல்லர் மூவர், தச்சர் இருவர் வரலாற்றினே எடுத்துக் காட்டி அவரை யடுத்து, வாணிகம் வளர்ந்த நகரங்களில் வழங்கிய நாணயங்களின் மதிப்பீட்டினேக் கானும் தொழில் மேற்கொண்டிருந்த வண்ணக்கர் அறுவர் வர லாற்றினேக் கூறி, அதன்பின் எடுத்துக் காட்டிய தொழில் போன்றன அல்லவாயினும், இவையும் தொழிலே, இவற்றைச் செய்வோரும் தொழிலாளரே எனக் கருதப் படும் மருத்துவர், கூத்தர், ஆசிரியர், சோதிடம் கூறுவோர் ஆகியோராய்ப் புலமையுற்றிருந்தார் சிலர் வரலாற்றினே வகுத்துக் கூறியுள்ளேன் : இவர்களுள் மருத்துவர் ஒருவர் ; கூத்தர் ஐவர் : ஆசிரியர் இருவர் ; சோதிடம் கூறும் கணி ஒருவராவர். இவ்வாறு, வணிகரும், பல்வேறு தொழி லாளருமாய் விளங்கும் இப்புலவர்கள் வரலாறு உரைக்கும் இந் நூலுக்கு மா, முதலாம் பலவகை மாங்கள் உள்ள ஒரு தோப்பிற்குப், பிறமாங்கள் உளவாகவும், மாவின் சிறப்புக் கருதி மாந்தோப்பு எனப் பெயரிடுவதே போல், இப் புலவர்கள் மேற்கொண்ட தொழில்களுள், வாணிகத் தொழிலே, ஏனைய தொழில்களினும் சிறப்புடையதாகலின், வணிகரிற் புலவர்கள் எனப் பெயரிடப்பட்டுளது.